முகப்பு |
தும்பி (வண்டு, சுரும்பு) |
2. குறிஞ்சி |
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! |
||
காமம் செப்பாது, கண்டது மொழிமோ: |
||
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், |
||
செறி எயிற்று, அரிவை கூந்தலின் |
||
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக |
30. பாலை |
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல், |
||
பொய்வலாளன் மெய் உற மரீஇய |
||
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து, |
||
அமளி தைவந்தனனே; குவளை |
||
வண்டு படு மலரின் சாஅய்த்' |
||
தமியென்; மன்ற அளியென் யானே! |
உரை | |
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி |
211. பாலை |
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
||
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
||
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
||
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
||
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
||
ஆராது பெயரும் தும்பி |
||
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை | |
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. |
உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
239. குறிஞ்சி |
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; |
||
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச் |
||
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் |
||
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி |
||
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் |
||
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே. |
உரை | |
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன் |
254. பாலை |
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, |
||
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் |
||
தலை அலர் வந்தன; வாரா-தோழி!- |
||
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; |
||
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்- |
||
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் |
||
எய்தினரால்' என, வரூஉம் தூதே. |
உரை | |
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான் |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
265. குறிஞ்சி |
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
||
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
||
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
||
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
||
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
||
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
||
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
||
தான் நாணினன், இஃது ஆகாவாறே. |
உரை | |
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
306. நெய்தல் |
'மெல்லிய, இனிய, மேவரு தகுந, |
||
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ, |
||
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் |
||
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் |
||
வண்டு வீழ்பு அயரும் கானல்- |
||
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? |
உரை | |
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
309. மருதம் |
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், |
||
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, |
||
நீடிய வரம்பின் வாடிய விடினும், |
||
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது' |
||
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் |
||
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- |
||
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், |
||
நின் இன்று அமைதல் வல்லாமாறே. |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன் |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. |
உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
370. முல்லை |
பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை |
||
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு |
||
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின், |
||
வில்லக விரலின் பொருந்தி; அவன் |
||
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே. |
உரை | |
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டபரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - வில்லக விரலினார் |
392. குறிஞ்சி |
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- |
||
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு |
||
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், |
||
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் |
||
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை |
||
தமரின் தீராள் என்மோ-அரசர் |
||
நிரை செலல் நுண் தோல் போலப் |
||
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! |
உரை | |
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார் |