22 சிறைசெய் காதை |
||
|
||
[ மணிமேகலை பொருட்டால் மடிந்தான் உதயகுமரன் என்பது மாதவர்வாய்க்கேட்ட மன்னவன் மணிமேகலையை மந்திரியாகிய சோழிகஏனாதியால் காவல்கொண்ட பாட்டு ] |
||
|
||
கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப |
||
நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு |
||
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் |
||
உதய குமரற்கு உற்றதை உரைப்பச் |
உரை | |
5 |
சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து |
|
மாதவர் எல்லாம் மணிமே கலைதனை |
||
இளங்கொடி அறிவதும் உண்டோ இதுஎனத் |
||
துளங்காது ஆங்குஅவள் உற்றதை உரைத்தலும் |
||
ஆங்குஅவள் தன்னை ஆர்உயிர் நீங்கிய |
||
10 |
வேந்தன் சிறுவனொடு வேறுஇடத்து ஒளித்து, |
உரை |
மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்துக் |
||
கோயில் மன்னனைக் குறுகினர் சென்றுஈங்கு |
||
உயர்ந்துஓங்கு உச்சி உவாமதி போல |
||
நிவந்துஓங்கு வெண்குடை மண்அகம் நிழல்செய |
||
15 |
வேலும் கோலும் அருள்கண் விழிக்க |
|
தீதுஇன்று உருள்கநீ ஏந்திய திகிரி |
||
நினக்குஎன வரைந்த ஆண்டுகள் எல்லாம் |
||
மனக்குஇனி தாக வாழிய வேந்தே! |
உரை | |
இன்றே அல்ல இப்பதி மருங்கில் |
||
20 |
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து |
|
பத்தினிப் பெண்டிர் பால்சென்று அணுகியும் |
||
நல்தவப் பெண்டிர் பின்உளம் போக்கியும் |
||
தீவினை உருப்ப உயிர்ஈறு செய்தோர் |
||
பார்ஆள் வேந்தே பண்டும் பலரால்: |
உரை | |
25 |
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் |
|
தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக் |
||
கன்னி ஏவலின் காந்த மன்னவன் |
||
இந்நகர் காப்போர் யார்என நினைஇ |
||
நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் |
||
30 |
காவல் கணிகை தனக்குஆம் காதலன் |
|
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் |
||
ககந்தன் ஆம்எனக் காதலின் கூஉய் |
உரை | |
அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின் |
||
பரசு ராமன்நின் பால்வந்து அணுகான் |
||
35 |
அமர முனிவன் அகத்தியன் தனாது |
|
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் |
||
ககந்தன் காத்தல் காகந்தி என்றே |
||
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு |
||
உள்வரிக் கொண்டுஅவ் உரவோன் பெயர்நாள் |
உரை | |
40 |
தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம் |
|
பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின் |
||
யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக் |
||
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் |
||
நீவா என்ன, நேர்இழை கலங்கி |
உரை | |
45 |
மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் |
|
பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர் |
||
புக்கேன் பிறன்உளம் புரிநூல் மார்பன் |
||
முத்தீப் பேணும் முறைஎனக்கு இல்என |
||
மாதுயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள் |
உரை | |
50 |
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் |
|
கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இலேன் |
||
கண்டோன் நெஞ்சில் கரப்புஎளி தாயினேன் |
||
யான்செய் குற்றம் யான்அறி கில்லேன் |
||
55 |
பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் |
|
தெய்வம் நீஎனச் சேயிழை அரற்றலும், |
உரை | |
மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி |
||
நீகேள் என்றே நேர்இழைக்கு உரைக்கும்: |
உரை | |
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் |
||
60 |
பெய்எனப் பெய்யும் பெருமழை என்றஅப் |
|
பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய் |
||
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு |
||
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் |
||
கடவுள் பேணல் கடவியை ஆகலின் |
||
65 |
மடவரல் ஏவ மழையும் பெய்யாது |
|
நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப் |
||
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை |
||
ஆங்குஅவை ஒழிகுவை ஆயின் ஆயிழை |
||
ஓங்குஇரு வானத்து மழையும்நின் மொழியது |
உரை | |
70 |
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக் |
|
கட்டாது உன்னைஎன் கடுந்தொழில் பாசம் |
||
மன்முறை எழுநாள் வைத்துஅவன் வழூஉம் |
||
பின்முறை அல்லது என்முறை இல்லை |
||
ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால் |
||
75 |
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் |
|
ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன |
||
இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப் |
||
பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன் |
||
தாதை வாளால் தடியவும் பட்டனன். |
உரை | |
80 |
இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த |
|
மண்ஆள் செல்வத்து மன்னவர் ஏறே! |
உரை | |
தரும தத்தனும் தன்மா மன்மகள் |
||
பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித் |
||
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் |
||
85 |
கைவினை கடந்த கண்கவர் வனப்பினர் |
|
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு |
||
ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர்எழப் |
||
புனையா ஓவியம் புறம்போந்து என்ன |
உரை | |
மனைஅகம் நீங்கி வாள்நுதல் விசாகை |
||
90 |
உலக அறவியின் ஊடுசென்று ஏறி |
|
இலகுஒளிக் கந்தின் எழுதிய பாவாய் |
||
உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீஎன, |
||
மாநகர் உள்ளீர் மழைதரும் இவள்என |
||
நாஉடைப் பாவை நங்கையை எடுத்தலும், |
உரை | |
95 |
தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின் |
|
மையல் ஊரோ மனமாசு ஒழியாது |
||
மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன் |
||
இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே |
||
நல்தாய் தனக்கு நல்திறம் சாற்றி |
||
100 |
மற்றுஅவள் கன்னி மாடத்து அடைந்தபின், |
உரை |
தரும தத்தனும் தந்தையும் தாயரும் |
||
பெருநகர் தன்னைப் பிறகிட்டு ஏகித் |
||
தாழ்தரு துன்பம் தலைஎடுத் தாய்என |
||
நாஉடைப் பாவையை நலம்பல ஏத்தி |
||
105 |
மிக்கோர் உறையும் விழுப்பெருஞ் செல்வத்துத் |
|
தக்கண மதுரை தான்சென்று அடைந்தபின், |
உரை | |
தரும தத்தனும் தன்மா மன்மகள் |
||
விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது |
||
பெண்டிரைப் பேணேன் இப்பிறப்பு ஒழிகெனக் |
||
110 |
கொண்ட விரதம் தன்னுள் கூறி |
உரை |
வாணிக மரபின் வருபொருள் ஈட்டி |
||
நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின் |
||
எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு |
||
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன். |
உரை | |
115 |
அந்த ணாளன் ஒருவன் சென்றுஈங்கு |
|
என்செய் தனையோ இருநிதிச் செல்வ |
||
பத்தினி இல்லோர் பலஅறம் செய்யினும் |
||
புத்தேள் உலகம் புகாஅர் என்பது |
||
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் |
||
120 |
நீட்டித்து இராது நின்நகர் அடைகெனத் |
|
தக்க மதுரை தான்வறிது ஆக |
||
இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே! |
உரை | |
மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டுப் |
||
பொன்தொடி விசாகையும் மனைப்புறம் போந்து |
||
125 |
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் |
|
அல்லவை கடிந்த அவன்பால் சென்று |
உரை | |
நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்நாள் |
||
மம்மர் செய்த வனப்புயாங்கு ஒளித்தன? |
||
ஆறுஐந்து இரட்டி யாண்டுஉனக்கு ஆயதுஎன் |
||
130 |
நாறுஐங் கூந்தலும் நரைவிரா வுற்றன |
|
இளமையும் காமமும் யாங்குஒளித் தனவோ |
||
உளன்இல் லாள! எனக்குஈங்கு உரையாய் |
||
இப்பிறப்பு ஆயின்யான் நின்அடி அடையேன் |
||
அப்பிறப்பு யான்நின் அடித்தொழில் கேட்குவன் |
உரை | |
135 |
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா |
|
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா |
||
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் |
||
மிக்க அறமே விழுத்துணை ஆவது |
||
தானம் செய்எனத் தரும தத்தனும் |
||
140 |
மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி |
|
ஆங்குஅவன் அவளுடன் செய்த நல்அறம் |
||
ஓங்குஇரு வானத்து மீனினும் பலவால். |
உரை | |
குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள் |
||
அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் |
||
145 |
படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண் |
|
கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல் |
||
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் |
||
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச் |
||
சுரிஇரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த |
||
150 |
விரிபூ மாலை விரும்பினன் வாங்கித் |
|
தொல்லோர் கூறிய மணம்ஈது ஆம்என |
||
எல்அவிழ் தாரோன் இடுவான் வேண்டி |
||
மாலை வாங்க ஏறிய செங்கை |
||
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின், |
உரை | |
155 |
ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் |
|
காரிகை பொருட்டுஎன, ககந்தன் கேட்டுக் |
||
கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான் |
||
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் |
உரை | |
ஊழிதொறு ஊழி உலகம் காத்து |
||
160 |
வாழி எங்கோ மன்னவ என்று |
|
மாதவர் தம்முள்ஓர் மாதவன் கூறலும், |
||
வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் |
||
இன்றே அல்ல என்றுஎடுத்து உரைத்து |
||
நன்றுஅறி மாதவிர் நலம்பலம் காட்டினிர் |
||
165 |
இன்றும் உளதோ இவ்வினை உரைம்என, |
உரை |
வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத் |
||
தீதுஇன்று ஆக செங்கோல் வேந்துஎன |
||
மாதவர் தம்முள்ஓர் மாதவன் உரைக்கும்: |
உரை | |
முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் |
||
170 |
கடியப் பட்டன ஐந்துஉள அவற்றில் |
|
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் |
||
தள்ளா தாகும் காமம் தம்பால் |
||
ஆங்குஅது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்என |
||
நீங்கினர் அன்றே நிறைதவ மாக்கள் |
||
175 |
நீங்கார் அன்றே நீள்நில வேந்தே! |
|
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் |
உரை | |
சேய்அரி நெடுங்கண் சித்திரா பதிமகள் |
||
காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் |
||
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள். |
||
180 |
மற்றவள் பெற்ற மணிமே கலைதான் |
|
முற்றா முலையினள் முதிராக் கிளவியள் |
||
செய்குவன் தவம்எனச் சிற்றிலும் பேரிலும் |
||
ஐயம் கொண்டுஉண்டு அம்பலம் அடைந்தனள் |
உரை | |
ஆங்குஅவள் அவ்இயல் பினளே ஆயினும் |
||
185 |
நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும் |
|
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள |
||
ஆர்இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் |
||
காயசண் டிகைவடிவு ஆயினள் காரிகை |
||
காயசண் டிகையும் ஆங்குஉளள் ஆதலின்; |
உரை | |
190 |
காயசண் டிகைதன் கணவன் ஆகிய |
|
வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி |
||
ஈங்குஇவள் பொருட்டால் வந்தனன் இவன்என |
||
ஆங்குஅவன் தீவினை உருத்தது ஆகலின்; |
உரை | |
மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன் |
||
195 |
உதய குமரன் ஒழியான் ஆக, |
|
ஆங்குஅவள் தன்னை அம்பலத்து ஏற்றி |
||
ஓங்குஇருள் யாமத்து இவனைஆங்கு உய்த்துக் |
||
காயசண் டிகைதன் கணவன் ஆகிய |
||
வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் |
||
200 |
விஞ்சை மகள்பால் இவன்வந் தனன்என |
|
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி |
||
ஆங்குஅவன் தன்கை வாளால் அம்பலத்து |
||
ஈங்குஇவன் தன்னை எறிந்ததுஎன்று ஏத்தி |
||
மாதவர் தம்முள்ஓர் மாதவன் உரைத்தலும், |
உரை | |
205 |
சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி |
|
யான்செயற் பாலது இளங்கோன் தன்னைத் |
||
தான்செய் ததனால் தகவுஇலன் விஞ்சையன் |
||
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் |
||
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் |
||
210 |
மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர் |
|
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது |
||
வேந்தர் தஞ்செவி உறுவதன் முன்னம் |
||
ஈங்குஇவன் தன்னையும் ஈமத்து ஏற்றிக் |
||
கணிகை மகளையும் காவல்செய்க என்றனன் |
||
215 |
அணிகிளர் நெடுமுடி அரசுஆள் வேந்துஎன். |
உரை |
சிறைசெய்
காதை முற்றிற்று. |
||
மேல் |