|
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை |
|
|
||
|
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு |
|
|
அடைந்த
பாட்டு
]
|
|
|
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த | |
|
தொல்முது கணிகைதன் சூழ்ச்சியின் போயவன் | |
|
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது | |
|
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி | |
5
|
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக் | |
|
||
|
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்துஆங்கு, | உரை |
|
அரவுஏர் அல்குல் அருந்தவ மடவார் | |
|
உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும், | |
|
ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள | |
10
|
மாஇரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும், | |
|
||
|
ஆங்குஅவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த | |
|
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும், | |
|
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தன்முன் | |
|
உருப்பசி முனிந்த என்குலத்து ஒருத்தியும், | |
15
|
ஒன்று கடைநின்ற ஆறிரு பதின்மர்இத் | |
|
||
|
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள்முதல் | |
|
யான்உறு துன்பம் யாவரும் பட்டிலர் | |
|
மாபெருந் தேவி மாதர் யாரினும், | உரை |
|
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று | |
20
|
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும், | |
|
||
|
பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி | |
|
அரங்கக் கூத்திசென்று ஐயம் கொண்டதும் | |
|
நகுதல் அல்லது நாடகக் கணிகையர் | |
|
தகுதி என்னார் தன்மை அன்மையின். | |
25
|
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் | |
|
||
|
இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் | உரை |
|
உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப் | |
|
பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல் | |
|
கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா | |
30
|
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற | |
|
||
|
பூநாறு சோலை யாரும்இல் ஒருசிறைத் | |
|
தானே தமியள் ஒருத்தி தோன்ற, | உரை |
|
இன்னள் ஆர்கொல் ஈங்குஇவள் என்று | |
|
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக் | |
35
|
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் | |
|
||
|
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் | |
|
உற்றுஉணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன் | |
|
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் | |
|
பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த | |
40
|
மலர்வாய் அம்பின் வாசம் கமழப் | |
|
||
|
பலர்புறம் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப | |
|
ஒருமதி எல்லை கழிப்பினும் உரையாள் | |
|
பொருவரு பூங்கொடி போயின அந்நாள் | உரை |
|
யாங்குஒளித் தனள்அவ் இளங்கொடி என்றே | |
45
|
வேந்தரை அட்டோன் மெல்இயல் தேர்வுழி, | |
|
||
|
நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறிச் | |
|
சலத்தில் திரியும்ஓர் சாரணன் தோன்ற, | உரை |
|
மன்னவன் அவனை வணங்கி முன்நின்று | |
|
என்உயிர் அனையாள் ஈங்குஒளித் தாள்உளள் | |
50
|
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் | |
|
||
|
சொல்லுமின் என்று தொழஅவன் உரைப்பான்: | |
|
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப் | |
|
பண்டுஅறி வுடையேன் பார்த்திப கேளாய்: | உரை |
|
நாக நாடு நடுக்குஇன்று ஆள்பவன் | |
55
|
வாகை வேலோன் வளைவணன் தேவி | |
|
||
|
வாச மயிலை வயிற்றுள் தோன்றிய | |
|
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள் | |
|
இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் | |
|
கருவொடு வரும்எனக் கணிஎடுத்து உரைத்தனன் | உரை |
60
|
ஆங்குஅப் புதல்வன் வரூஉம் அல்லது | |
|
||
|
பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள்: | |
|
தீவகச் சாந்தி செய்யா நாள்உன் | |
|
காவல் மாநகர் கடல்வயிறு புகூஉம் | |
|
மணிமே கலைதன் வாய்மொழி யால்அது | |
65
|
தணியாது இந்திர சாபம்உண் டாகலின். | உரை |
|
||
|
ஆங்குப்பதி அழிதலும் ஈங்குப்பதி கெடுதலும் | |
|
வேந்தரை அட்டோய் மெய்எனக் கொண்டுஇக் | |
|
காசுஇல் மாநகர் கடல்வயிறு புகாமல் | |
|
வாசவன் விழாக்கோள் மறவேல் என்று | |
70
|
மாதவன் போயின அந்நாள் தொட்டும்இக் | |
|
||
|
காவல் மாநகர் கலக்குஒழி யாதால் | உரை |
|
தன்பெயர் மடந்தை துயர்உறு மாயின் | |
|
தன்பெருந் தெய்வம் வருதலும் உண்டுஎன | |
|
அஞ்சினேன் அரசன் தேவிஎன்று ஏத்தி | |
75
|
நல்மனம் பிறந்த நாடகக் கணிகையை | |
|
||
|
என்மனைத் தருகென, இராசமா தேவி | உரை |
|
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் | |
|
உள்ளக் களவும்என்று உரவோர் துறந்தவை | |
|
தலைமையாக் கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை | |
80
|
புலைமைஎன்று அஞ்சிப் போந்த பூங்கொடி | |
|
||
|
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள் | |
|
என்னொடு இருக்கும்என்று ஈங்குஇவை சொல்வுழி, | உரை |
|
மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத் | |
|
துணிகயம் துகள்படத் துவங்கிய வதுபோல் | |
85
|
தெளியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து | |
|
||
|
வளிஎறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி | |
|
அறவணர் அடிவீழ்ந்து ஆங்குஅவர் தம்முடன் | |
|
மறவேல் மன்னவன் தேவிதன் பால்வரத் | உரை |
|
தேவியும் ஆயமும் சித்திரா பதியும் | |
90
|
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் | |
|
||
|
எழுந்துஎதிர் சென்றுஆங்கு இணைவளைக் கையால் | |
|
தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க | |
|
அறிவுஉண் டாகஎன்று ஆங்குஅவன் கூறலும், | உரை |
|
இணைவளை நல்லாள் இராசமா தேவி | |
95
|
அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டித் | |
|
||
|
திருந்துஅடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் | |
|
யாண்டுபல புக்கநும் இணைஅடி வருந்தஎன் | |
|
காண்தகு நல்வினை நும்மைஈங்கு அழைத்தது | |
|
நாத்தொலைவு இல்லாய் ஆயினும் தளர்ந்து | |
100
|
மூத்தஇவ் யாக்கை வாழ்கபல் ஆண்டுஎன, | உரை |
|
||
|
தேவி கேளாய் செய்தவ யாக்கையின் | |
|
மேவினேன் ஆயினும் வீழ்கதிர் போன்றேன் | |
|
பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார் | |
|
இறந்தார் என்கை இயல்பே இதுகேள்: | உரை |
105
|
பேதைமை செய்கை உணர்வே அருவுரு | |
|
||
|
வாயில் ஊறே நுகர்வே வேட்கை | |
|
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் | |
|
இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும் | |
|
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர் | |
110
|
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர் | உரை |
|
||
|
பேதைமை என்பது யாதுஎன வினவின் | |
|
ஓதிய இவற்றை உணராது மயங்கி | |
|
இயற்படு பொருளால் கண்டது மறந்து | |
|
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல் | உரை |
115
|
உலகம் மூன்றினும் உயிராம் உலகம் | |
|
||
|
அலகுஇல் பல்உயிர் அறுவகைத் தாகும் | |
|
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் | |
|
தொக்க விலங்கும் பேயும் என்றே | |
|
நல்வினை தீவினை என்றுஇரு வகையால் | |
120
|
சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி | |
|
||
|
வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு | |
|
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும் | உரை |
|
தீவினை என்பது யாதுஎன வினவின் | |
|
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய் | |
125
|
கொலையே களவே காமத் தீவிழைவு | |
|
||
|
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும், | |
|
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல் | |
|
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும், | |
|
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று | |
130
|
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப் | |
|
||
|
பத்து வகையால் பயன்தெரி புலவர் | |
|
இத்திறம் படரார் படர்குவர் ஆயின் | |
|
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் | |
|
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர், | உரை |
135
|
நல்வினை என்பது யாதுஎன வினவில் | |
|
||
|
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் | |
|
சீலம் தாங்கித் தானம் தலைநின்று | |
|
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத் | |
|
தேவரும் மக்களும் பிரமரும் மாகி | |
140
|
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் | உரை |
|
||
|
அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர் | |
|
புரைதீர் நல்அறம் போற்றிக் கேண்மின் | |
|
மறுபிறப்பு உணர்ந்த மணிமே கலைநீ | |
|
பிறஅறம் கேட்ட பின்னாள் வந்துஉனக்கு | |
145
|
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் | |
|
||
|
முத்துஏர் நகையாய் முன்னுறக் கூறுவல் | |
|
என்றுஅவன் எழுதலும், இளங்கொடி எழுந்து | உரை |
|
நன்றுஅறி மாதவன் நல்அடி வணங்கித் | |
|
தேவியும் ஆயமும் சித்திரா பதியும் | |
150
|
மாதவர் நல்மொழி மறவாது உய்ம்மின் | |
|
||
|
இந்நகர் மருங்கின்யான் உறைவேன் ஆயின் | |
|
மன்னவன் மகற்குஇவள் வரும்கூற்று என்குவர் | |
|
அடைந்துஅதன் பின்னாள் | |
|
மாசுஇல் மணிபல் லவம்தொழுது ஏத்தி | |
155
|
வஞ்சியுள் புக்கு மாபத் தினிதனக்கு | |
|
||
|
எஞ்சா நல்அறம் யாங்கணும் செய்குவல் | |
|
எனக்குஇடர் உண்டுஎன்று இரங்கல் வேண்டா | |
|
மனக்குஇனி யீர்என்று அவரையும் வணங்கி, | உரை |
|
வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த | |
160
|
அந்தி மாலை ஆயிழை போகி | |
|
||
|
உலக அறவியும் முதியாள் குடிகையும் | |
|
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு | |
|
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை | |
|
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர் | |
165
|
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து | |
|
||
|
ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி, | |
|
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும் | |
|
மன்னவன் யார்என மாதவன் கூறும் | உரை |
|
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன் | |
170
|
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன் | |
|
||
|
ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும் | |
|
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது | |
|
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம் | |
|
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத் | |
175
|
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன் | |
|
உரை | |
|
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என். | |
|
||
|
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை முற்றிற்று.
|
|
மேல் |