39.
புனற்பாற்பட்டது
|
இதன்கண்: கணிகள் நீராடுதற்குரிய
நல்ல முழுத்தம் பார்த்துக் கூறுதலும், அரசன் முதலியோர் நீராடற்பொருட்டு இரவலர்க்குச்
சிறந் த பொருள்களை வழங்குதலும் பிறவும் கூறப்படும். |
|
5 |
நம்பியர் கூடிய நாளவை
மருங்கில் கம்பலைப் பந்தர்க் காழ்அகில்
கழுமிய திருநாள் இருக்கைத் திறல்கெழு
வேந்தன் பெருநீர் ஆட்டணி பெட்கும்
பொழுதெனச் செம்பொன் படத்துப் பேறுவலித்
திருந்த மங்கலக் கணிகண் மாதிரம்
நோக்கிப் புரைமீன் கூடிய பொழுதியல் கூற
|
உரை
|
|
10
15 |
இருப
தியானையும் எண்பது
புரவியும் அருமணி மான்தேர் ஐயைந்து
இரட்டியும் ஒருநூறு
ஆயிரத்து ஒருகழஞ்சு
இறுத்த தமனிய மாசையொடு தக்கணை
உதவிக் கடவது நிறைந்த தடவளர்
செந்தீ ஒடியாக் கேள்விப் பெரியோர்
ஈண்டிய படிவக் குழுவினுள் அடிமுதல்
வணங்கி ஆசை
மாக்களொடு அந்தணர் கொள்கென
|
உரை
|
|
20
25
| மாசை
வாரி மன்னவன்
நாடி அறிநர் தானத்து ஆயிரம்
பொற்பூக் கருவிநிலைப் பள்ளிக்குத் தொழுதனன்
போக்கிச் சுண்ணம் விரவிய சுரியிரும்
பித்தைக் கண்ணி
நெற்றி வெண்சூட்டு
ஏற்றித் தூத்துகில் உடுத்துத் தொடியுடைத்
தடக்கைக் கோத்தொழில் இளையர் பூப்பலி
கொடுத்துச் செம்பொன் நெல்லின் செல்கதிர்
சூட்டி வெண்துகில் இட்ட விசய
முரசம் பண்டியல்
எமைந்த படுகடன்
எல்லாம் தண்தொழில் செங்கோல் தலைத்தலை
சிறக்கென வெந்திறல் வேந்தன் விட்டிவை கூறக்
|
உரை
|
|
30
35
|
கண்டொரு பாணியில் கடல்கிளர்ந்
ததுபோல் பல்படை மொய்த்த மல்லல் பெருங்கரை மழைமலைத் தன்ன மாணிழை
மிடைந்து வம்புவிசித்து யாத்த செம்பொன்
கச்சையர் மாலை அணிந்த கோல்செய்
கோலத்துப் பூப்போ துறுத்த மீப்பொற்
கிண்கிணி இடுமணிப் பெருநிரை நெடுமணிற்
கிடைஇ இரும்புறம்
புதைய எழின்மறைந்து
இருந்த கருங்காற் கானத்துக் கண்மணிக்
குழாத்திடை ஏற்றரி மாவின் தோற்றம்
போல மின்னிழை மகளிரொடு மன்னவன் தோன்றி
|
உரை
|
|
40
45
|
விசைய வேழத் திசையெருத்
தேற்றிப் பெருவிரல் வேந்தன் சிறுவரை
எல்லாம் ஓடுநீர்ப் பெருந்துறை உள்ளம்
பிறந்துழி ஆடுக போயென்று அவர்களை
அருளி உதயண குமரனுன் உவந்துழி
ஆடித் துறைநகர் விழவின் தோற்றம்
எல்லாம் பரந்த
செல்வம் காண்கெனப்
பணித்துப் புரிந்த பூவொடு பொற்சுணம்
கழும
எழுந்த வார்ப்பொடு இயம்பல
துவைப்பப் புண்ணியப் பெருந்துறை மன்னவன் படிந்தபின்
|
உரை
|
|
50
55
|
இறைகொண்டு ஈண்டிய ஏனை
மாந்தரும் துறைதுறை
தோறும் உறைவிடம்
பெறாஅர் தண்புனல் ஆட்டின் தக்கணை
ஏற்கும் அந்த ணாளர் அடைக
விரைந்தெனப் பயில்நூல் ஆளரைப் பயிர்வனர்
கூஉய்க் கவர்வனர் போலக் காதலின்
உய்த்து நன்கலம்
ஏற்றி நாளணி
அணிந்து மங்கல
வேள்வியுள் மகள் ஈவோரும்
|
உரை
|
|
60
65
|
செம்பொன் புரிசை வெண்சுதை
மாடத்து உழைக்கலம் பரப்பி உருவிய
மகளிரொடு இழைக்கலம் நிறீஇ இல்ஈ
வோரும் ஆலைக்
கரும்பும் அரியுறு
செந்நெலும் பாளைக் கமுகின் படுவும்
சுட்டிப் புயல்சேண் நீங்கினும் பூவளங்
குன்றா வயலும் தோட்டமும் வழங்கு
வோரும் நாகுசூல் நீங்கிய சேதாத்
தொகுத்துக் குளம்புங்
கோடும் விளங்குபொன்
உறீஇத் தளையுந் தாம்பும் அளைகடை
மத்தும் கழுவுங் கலனும் வழுவில
பிறவும் பைம்பொனின் இயன்றவை பாற்பட
வகுத்துக் குன்றாக கோடி கொடுத்துஉவப் போரும் |
உரை
|
|
70
75
|
இன்னவை பிறவும்
என்னோர்க்கு
ஆயினும் உடையவை தவாஅக் கொடைபுரி
படிவமொடு இலமென் மாக்களை இரவொழிப்
பவர்போல் கலங்கொடை பூண்ட கைய
ராகி வெண்துகில் பூட்டிய வேழக
குழவியும் ஒண்படை
அணிந்த வண்பரிப்
பரவியும் உண்டியும் உடையுங் கொண்டகம் செறித்த பண்டியும் ஊர்தியும்
கொண்டனர் உழிதந்து அந்தணர் சாலையும்
அருந்தவர் பள்ளியும் தந்துஅற மருங்கில் தலைவைப் போரும் |
உரை
|
|
80
85 |
நிலம்பெய் வோரும்
நிதிபெய் வோரும் களிறுபெய் வோரும் பரிபெய்
வோரும் பெய்வோர் பெய்வோர் பெயர்வறக்
குழீஇக் கொள்வோர் அறியாக் குரலர்
ஆகி மணல்கெழு பெருந்துறை மயங்குபு
தழீஇ வனப்பொடு
புணர்ந்த வகையிற்று
ஆகிப் புனல்பால் பட்டன்றால் பூநகர் புரிந்தென் |
உரை
|
|