|
New Page 1
குடநீர் வார்த்து ஆக்குவது
அழிப்பதாய் விளையாட்டின்பம் தூய்க்குமாறு போன்று’
பக். 75.
‘செப்பிலே கிடந்த
ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு
போன்று’
பக். 83.
‘அய்யன்
பாழியில் ஆனை போர்க்கு உரித்தாகாதது போன்று’
பக். 86.
‘ஆகிருதியினைச்
சொல்லுகிற சொல்லானது வடிவிலே சென்று, முடிந்து நிற்குமாறு போன்று’
பக். 87.
‘குணத்தோடு கூடிய
பொருள் தோன்றாநிற்கவும், செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று’
பக்.
87.
‘விருக்ஷல விவாக மந்திரம்
போலே’
பக். 88.
‘இச்சரீரத்துக்கு
ஆத்துமா தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருப்பது போன்று’
பக். 90.
‘பல தூண்களில் ஓர்
உத்திரம் கிடப்பது போல’
பக். 91.
‘உளன் என்கிற
சொல்லால் சொன்னால், உனக்கு விருப்பமான இல்லாமை சித்திக்காதது போன்று’
பக். 97.
‘ஓர் அண்டத்தைச்
சமைத்து, அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று’
பக். 99.
‘இச்செய்
அடைய நெல் என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று’
பக். 103.
‘சிறுகுழந்தை கையிலே
பாம்பைப் பிடித்துக்கொண்டு கிடந்தால் போகடச்சொல்லி, பின்னர்ப் ‘பாம்பு’ என்பாரைப்
போலவும், ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால்,
‘வெளியே வா’ என்று சொல்லி, பின்னர் ‘நெருப்பு’ என்பாரைப் போலவும்’
பக். 109.
‘சண்டாளர்
இருப்பிடத்தைப் பிராமணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும் சிலவற்றைக்
கழிப்பதும் செய்யார்; அது போன்று’
பக். 109.
‘அரசகுமாரன் அழகு
சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறை விடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று’
பக். 109.
‘மிகத் தாழ்ந்த
பொருளை உள்ளே வைத்து மெழுக்கூட்டினதைப்போன்று’
பக். 110.
|