|
New Page 1
‘ஒருவன் ஒருவனை,
‘உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்னவேணும்?, என்றால், தன் மனைவி மக்களையுங்கூட்டிக்கொண்டு
‘எனக்குக் கலநெல் வேணும்’ என்பது போன்று’
பக். 151.
‘இலிங்கத்துக்கே
உயர்வு தோற்றும்படியாய் இருப்பதொரு பிரபந்தம் செய்து தரல் வேண்டும் என்பாரைப் போன்று’
பக்.
160.
‘சாலில் எடுத்த
நீர் போன்று’
பக். 163.
‘பாரி மாண்டல்யம்
முதலியவைகள் நித்தியமாக இருக்கவும், நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும், இறைவனுடைய
சொரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும், அக்குணங்கள் நித்திய பரதந்திரமாயிருக்குமாறு
போன்றும்’
பக். 165.
‘பருவமல்லாத காலங்களில்
கடல் தீண்டலாகாது என்னுமாறு போன்று’
பக். 167.
‘பால் குடிக்கும் குழந்தைகள்,
தாயின் மார்பினை அகலின் நாக்கு வரளுமாறு போன்று’
பக். 169.
‘சாமந்தர்கட்குப்
புறம்பே நாடுகள் மிகுதியாக இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்கட்கு மேன்மையாக
நினைத்திருப்பதைப் போன்று’
பக். 170.
‘வேற்றரசர்களால்
கலகங்கள் உண்டான காலங்களில் அடையவளைந்தானுக்குள்ளே குடி வாங்கியிருந்து. கலகம் நீங்கியவாறே
புறம்பே புறப்பட்டாலும், ‘இவ்விடம் இன்னார் பற்று; இவ்விடம் இன்னார் பற்று’ என்று பின்னும்
தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு போன்று’
பக். 170.
‘சிறையிலே இருந்த
இராசகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று’
பக்.
176.
‘இது மற்றொரு காரகம்
என்னுமாறு போன்று’
பக். 178.
‘பசியில்லாத காலத்தில்
உணவு நோயினைத் தருவதாம் எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள், ‘உணவு உண்ணலாகாது’
என்று விலக்குமாறு போன்று’
பக். 179.
‘தாமரை திருவடிகளுக்குப்
போலியாக இருக்க, ‘வையங் கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று’
பக். 180.
|