செந்தமிழ்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
தமிழ் மக்களின் தாய்மொழி தமிழ். தமிழ் மொழி மிகப் பழமையான மொழி. பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் இம்மொழியைப் பேசி வருகின்றனர்.
தமிழ் மொழியில் உள்ள நூல்களின் எண்ணிக்கை அதிகம். அவை இலக்கணங்கள், இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் எனப் பல வகைப்படும். இவை போன்ற மேலும் பல சிறப்புகளை உடையது தமிழ் மொழி.
இப்பாடம் தமிழ் மொழி குறித்த பல தகவல்களைத் தருவதாக அமைகிறது.