செந்தமிழ்

செந்தமிழ்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  வடமொழி, இலத்தீன், கிரேக்க மொழிகளின் வரிசையில் இடம்பெறும் செம்மொழிகளுள் ஒன்று.

அ) தமிழ்

ஆ) ஆங்கிலம்

இ) பிரெஞ்சு

ஈ) செர்மனி

அ) தமிழ்

2.  தமிழ் மொழி எவ்வகைப்பட்டது?

அ) உயர்தனிச் செம்மொழி

ஆ) செம்மொழி

இ) தனிமொழி

ஈ) உயர்மொழி

அ) உயர்தனிச் செம்மொழி

3.  வால்மீகி இராமாயணம் எம்மொழி நூல் ?

அ) ஆங்கிலம்

ஆ) தமிழ்

இ) வடமொழி

ஈ) இலத்தீன்

இ) வடமொழி

4.  வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?

அ) பாணினி

ஆ) வால்மீகி

இ) கௌடில்யர்

ஈ) வியாசர்

ஆ) வால்மீகி

5.  மகாபாரதம் வடமொழியில் யாரால் எழுதப்பட்டது?

அ) வால்மீகி

ஆ) வில்லிபுத்துரார்

இ) பெருந்தேவனார்

ஈ) வியாசர்

ஈ) வியாசர்

6.  மலையாளம் எந்த மொழியில் இருந்து தோன்றியது?

அ) தெலுங்கு

ஆ) கன்னடம்

இ) தமிழ்

ஈ) வங்காளம்

(இ) தமிழ்

7.  குமரிக்கண்டத்தின் மற்றொரு பெயர் என்ன?

அ) லெமூரியாக் கண்டம்

ஆ) ஆசியாக் கண்டம்

இ) ஆப்பிரிக்காக் கண்டம்

ஈ) அமெரிக்காக் கண்டம்

அ) லெமூரியாக் கண்டம்

8.  தமிழ்மொழி எப்பண்பு உடையது?

அ) அரிய பண்பு

ஆ) சிறப்புப் பண்பு

இ) திருந்திய பண்பு

ஈ) திருந்தாத பண்பு

(இ) திருந்திய பண்பு

9.  பழமைக்கும் பழமையானது; புதுமைக்கும் புதுமையானது-எம்மொழி?

அ) தமிழ்

ஆ) ஆங்கிலம்

இ) இந்தி

ஈ) சமற்கிருதம்

(அ) தமிழ்

10.  தமிழ்மொழிக்கே உரிய சிறப்பு எழுத்துகள் எவை?

அ) க

ஆ) த

இ) ழ, ற, ன

ஈ) அ

(இ) ழ, ற, ன