செந்தமிழ்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. உலகில் உள்ள செம்மொழிகள் யாவை?
தமிழ், கிரேக்கம், சமற்கிருதம், இலத்தீன், சீனம், அரபி ஆகியன உலகில் உள்ள செம்மொழிகள் ஆகும்.
2. தமிழ் எவ்வகைச் செம்மொழி?
தமிழ் உயர்தனிச் செம்மொழி.
3. தமிழ் எத்தனை ஆண்டு பழமை உடையது?
தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது.
4. தமிழ்மொழி உதவியால் பயன்பெறும் மொழிகள் யாவை?
தமிழ்மொழி உதவியால் பயன்பெறும் மொழிகள் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியன.
5. தமிழ்மொழி பற்றிய குறிப்புகள் உள்ள வடமொழி நூல்கள் யாவை?
தமிழ்மொழி பற்றிய குறிப்புகள் உள்ள நூல்கள் வால்மீகியின் இராமாயணம், வியாசரின் பாரதம்.
6. உலகிலேயே மிகவும் பழமையான இலெமூரியாக் கண்டம் பற்றி எழுதுக.
உலகிலேயே மிகவும் பழமையானது இலெமூரியாக் கண்டம். இதற்குக் குமரிக்கண்டம் என்றும் பெயர். இங்குப் பேசப்பெற்ற மொழி தமிழ்.
7. தமிழ்மொழியில் உள்ள சிறப்பு எழுத்துகள் யாவை?
தமிழ்மொழியில் உள்ள சிறப்பு எழுத்துகள் ழ, ற, ன.
8. தமிழ் செம்மொழி என்பதற்குப் பெற்றுள்ள இரு சிறப்புப் பண்புகள் யாவை?
திருந்திய பண்பு, நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் சிறப்பு.
9. தமிழ்மொழி பழமையான மொழியா? புதுமையான மொழியா?
தமிழ் மொழி பழமையும், புதுமையும் உடைய மொழி.
10. எந்தெந்த அடிப்படையில் தமிழ் பழமையான சிறந்த மொழி எனலாம்?
அறிவியல் அடிப்படையிலும், இலக்கிய அடிப்படையிலும் தமிழ் பழமையான சிறந்த மொழி எனலாம்.