செந்தமிழ்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தமிழ் மொழி -------------- ஆண்டு பழமை உடையது.
தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டு பழமை உடையது.
2. சமற்கிருதத்தில் இராமாயணத்தை எழுதியவர் -----------------
சமற்கிருதத்தில் இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி
3. சமற்கிருதத்தில் பாரதத்தை எழுதியவர் ---------------
சமற்கிருதத்தில் பாரதத்தை எழுதியவர் வியாசர்
4. வடமொழி என்பதன் மற்றொரு பெயர் -------------- ........................................
வடமொழி என்பதன் மற்றொரு பெயர் சமற்கிருதம்
5. குமரிக் கண்டம் --------------- என்றும் அழைக்கப்படும்.
குமரிக் கண்டம் லெமூரியாக் கண்டம் என்றும் அழைக்கப்படும்.
6. குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் ------------- மொழி பேசினார்கள்.
குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள்.
7. தமிழ்மொழியில் உள்ள சிறப்பு எழுத்துகள் -----------------.
தமிழ்மொழியில் உள்ள சிறப்பு எழுத்துகள் ழ, ற, ன
8. பாண்டிய நாட்டுக் கோட்டைக் கதவில் ---------------- இருந்தன.
பாண்டிய நாட்டுக் கோட்டைக் கதவில் முத்துகள், மணிகள் இருந்தன.
9. தமிழ்மொழி -------------- வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் சிறப்பு உடையது.
தமிழ்மொழி நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் சிறப்பு உடையது.
10. சில மொழிகள் வளரத் ------------- உதவி உள்ளது.
சில மொழிகள் வளரத் தமிழ் உதவி உள்ளது.