நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

நஞ்சு உண்ட நாயக மூர்த்தி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  'நஞ்சு உண்ட நாயக மூர்த்தி' வீட்டில் யார் யார் இருந்தார்கள்?

நஞ்சு உண்ட நாயக மூர்த்தி வீட்டில் தாத்தா, அப்பா, அம்மா ஆகியோர் இருந்தனர்.

2.  நஞ்சு உண்ட நாயக மூர்த்தி் என்ற பாடத்தில் இடம் பெறும் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

அரிச்சந்திரன், நஞ்சு உண்ட நாயக மூர்த்தி, ஆவுடையப்பன், தொல்காப்பியன் ஆகிய பெயர்கள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன.

3.  'நஞ்சு' பானை அடுக்கில் எந்தப் பானையைப் பிடித்து இழுத்தான்?

'நஞ்சு' பானை அடுக்கில் நடுப்பானையைப் பிடித்து இழுத்தான்.

4.  'நஞ்சு' தேர்வில் எழுதிய உணவுப் பொருட்கள் எவை?

நஞ்சு தேர்வில் எழுதிய உணவுப் பொருட்கள் அதிரசம், ஆப்பம், இடியாப்பம் போன்றவை ஆகும்.

5.  நஞ்சு இரவில் யாரைப் பார்த்துப் பயந்தான்?

நஞ்சு இரவில் திருடர்களைப் பார்த்துப் பயந்தான்.

6.  'நஞ்சு'வையும், அப்பாவையும் அடிக்க வந்தவர் யார்?

'நஞ்சுவையும்' அப்பாவையும் அடிக்க வந்தவர் மருத்துவர்.

7.  'நஞ்சு உண்ட நாயக மூர்த்தி' என்ற பெயரை வைக்கச் சொன்னவர் யார்?

'நஞ்சு உண்ட நாயக மூர்த்தி' என்ற பெயரை வைக்கச் சொன்னவர் தாத்தா.

8.  மருத்துவர் வீட்டில் என்ன என்ன வடிவங்களில் மருந்துப் பொருட்கள் இருந்தன?

மருத்துவர் வீட்டில் உருண்டை, சதுரம், கட்டி, பொடி ஆகிய வடிவங்களில் மருந்துப் பொருட்கள் இருந்தன.

9.  'நஞ்சு' தேர்வை முழுமையாக எழுதினானா?

இல்லை. நஞ்சு தேர்வை முழுமையாக எழுதவில்லை, பாதி மட்டுமே எழுதினான்.

10.  'நஞ்சு'வை உனக்குப் பிடித்திருக்கிறதா?

ஆம், பிடித்திருக்கிறது (அல்லது) இல்லை, பிடிக்கவில்லை. (உங்களுக்குப் பிடித்திருந்தால் 'ஆம்', எனவும் பிடிக்கவில்லை எனில் 'இல்லை' எனவும் விடை தரலாம்)