நஞ்சு உண்ட நாயக மூர்த்தி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. 'நஞ்சு உண்ட நாயக மூர்த்தி' என்ற பெயரை வைக்கச் சொன்னவர் --------.
'நஞ்சு உண்ட நாயக மூர்த்தி' என்ற பெயரை வைக்கச் சொன்னவர் தாத்தா.
2. 'நஞ்சு' என்பதற்கு --------- என்பது பொருள்.
'நஞ்சு' என்பதற்கு விஷம் என்பது பொருள்.
3. 'நஞ்சு' என்ற பெயர் ----------- கிலோ மீட்டர் நீளமாக இருப்பதாக அப்பா சொன்னார்.
'நஞ்சு' என்ற பெயர் நான்கு கிலோ மீட்டர் நீளமாக இருப்பதாக அப்பா சொன்னார்.
4. நாளொரு --------- பொழுது ஒரு -------- எனச் சாப்பிட்டு வளர்ந்தான் நஞ்சு.
நாளொரு தீனியும் பொழுது ஒரு பலகாரமும் எனச் சாப்பிட்டு வளர்ந்தான் நஞ்சு.
5. 'நஞ்சு' ---------- வகுப்பில் படித்தான்.
'நஞ்சு' ஐந்தாம் வகுப்பில் படித்தான்.
6. நஞ்சு 'அ' என்ற எழுத்துக்கு -------- என எழுதினான்.
நஞ்சு 'அ' என்ற எழுத்துக்கு அதிரசம் என எழுதினான்.
7. 'நஞ்சு' மருத்துவர் வீட்டில் இருந்த -------- அடுக்கைத் தொட்டான்.
'நஞ்சு' மருத்துவர் வீட்டில் இருந்த பானை அடுக்கைத் தொட்டான்.
8. 'நஞ்சு'வுக்கு ------- எழுத்தில் தொடங்கும் உணவுப் பொருள்கள் தெரியவில்லை.
'நஞ்சு'வுக்கு ஈ, உ, ஏ, ஒ, ஓ, ஒள எழுத்தில் தொடங்கும் உணவுப் பொருள்கள் தெரியவில்லை.
9. 'நஞ்சு' வீட்டில் ----------- பொருள்கள் வைக்கும் அறைக்குச் சென்றான்.
'நஞ்சு' வீட்டில் பழைய பொருள்கள் வைக்கும் அறைக்குச் சென்றான்.
10. 'நஞ்சு'வின் வீட்டிற்கு வந்த திருடர் எண்ணிக்கை ------.
'நஞ்சு'வின் வீட்டிற்கு வந்த திருடர் எண்ணிக்கை இரண்டு.