காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  காஞ்சிபுரத்திற்கு உள்ள இரண்டு சிறப்புகள் யாவை?

காஞ்சிபுரத்திற்கு உள்ள இரண்டு சிறப்புகளில் ஒன்று கோயில்கள்,இரண்டாவது பட்டுச்சேலைக் கடைகள்.

2.  காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில் பெயர் என்ன?

காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோயில் பெயர் வரதராசப் பெருமாள் கோயில்.

3.  கலைக் கூடம் போல் காட்சி தரும் கோயில் எது?

கலைக் கூடம் போல் காட்சி தரும் கோயில் கைலாசநாதர் கோயில்

4.  காஞ்சிபுரத்தில் உள்ள வேறு கோயில்கள் யாவை?

கச்சபேசுவரர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், குமரக்கோட்டம், திருப்பருத்திக் குன்றம் முதலியன காஞ்சிபுரத்தில் உள்ள வேறு கோயில்களாகும்.

5.  தம்பிக்கு அண்ணன் என்ன எழுதினார்?

தம்பிக்கு அண்ணன் கடிதம் எழுதினார்.

6.  தம்பியின் படிப்பு எத்தனை ஆண்டுக் காலம்?

தம்பியின் படிப்பு நான்கு ஆண்டுக் காலம்.

7.  காஞ்சிபுரத்தில் உள்ள பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

காஞ்சிபுரத்தில் உள்ள பகுதிகள் (1) வைணவக் காஞ்சி, (2) சமணக் காஞ்சி, (3) சைவக் காஞ்சி என்று அழைக்கப்படுகின்றன.

8.  திருப்பருத்திக் குன்றத்தில் எத்தனை கோயில்கள் உள்ளன?

திருப்பருத்திக் குன்றத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன.

9.  கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?

கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் இராசசிம்மன் என்ற மன்னன்.

10.  காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோயில் எது?

காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோயில் காமாட்சி அம்மன் கோயில்.