காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கைலாசநாதர் கோயில் ----------- சமயக் கோயில் ஆகும்.

கைலாசநாதர் கோயில் சைவ சமயக் கோயில் ஆகும்.

2.  திருப்பருத்திக் குன்றம் ----------- சமயக் கோயில்கள் உள்ள இடம் ஆகும்.

திருப்பருத்திக் குன்றம் சமண சமயக் கோயில்கள் உள்ள இடம் ஆகும்.

3.  வரதராசப் பெருமாள் கோயில் ---------- சமயக் கோயில் ஆகும்.

வரதராசப் பெருமாள் கோயில் வைணவ சமயக் கோயில் ஆகும்.

4.  கைலாசநாதர் கோயில் உள்ள இடம் -------- காஞ்சி எனப்படுகிறது.

கைலாசநாதர் கோயில் உள்ள இடம் சைவக் காஞ்சி எனப்படுகிறது.

5.  திருப்பருத்திக் குன்றம் ------- காஞ்சி எனப்படுகிறது.

திருப்பருத்திக் குன்றம் சமணக் காஞ்சி எனப்படுகிறது.

6.  வரதராசப் பெருமாள் கோயில் உள்ள இடம் -------- காஞ்சி எனப்படுகிறது.

வரதராசப் பெருமாள் கோயில் உள்ள இடம் வைணவக் காஞ்சி எனப்படுகிறது.

7.  காஞ்சிபுரத்தில் ---------- அம்மன் கோயில் உள்ளது.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.

8.  காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில் ----------- என அழைக்கப் படுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில் குமரக்கோட்டம் என அழைக்கப் படுகிறது.

9.  காஞ்சிபுரம் ------------- சிறந்த ஊராகும்.

காஞ்சிபுரம் கலைகளுக்குச் சிறந்த ஊராகும்.

10.  காஞ்சிபுரத்தில் ---------- கடைகள் அதிகம்.

காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைக் கடைகள் அதிகம்.