காஞ்சிபுரம்
மையக்கருத்து
Central Idea
காஞ்சிபுரம் பல சிறப்புகள் கொண்ட நகரம். அதில் பல சமயங்களின் கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்கள் உள்ள இடங்கள் ஒவ்வொரு பெயருடன் அழைக்கப் பெறுகின்றன. ஒவ்வொரு சமயக் கோயில்களிலும் அழகான சிற்பங்கள் காணப் பெறுகின்றன, பலமண்டபங்கள் உள்ளன, அழகிய ஓவியங்களும் வரையப் பெற்றுள்ளன, சிவன் கோயில் உள்ள இடம் சைவக் காஞ்சி என்றும், திருமால் கோயில் உள்ள இடம் வைணவக் காஞ்சி என்றும், சமணக் கோயில் உள்ள இடம் சமணக் காஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே காஞ்சிபுரம் மரபும், கலையும் சேர்ந்த நகராக உள்ளது.
Kanchipuram is a great and famous city. It has places of worship for many religions. All the temples are have beautiful and excellent stone carving of sculptures, 'Stole Halls' and paintings. An area is known by the temple built in that place. Where there is a Siva temple, the place is called Saiva Kanchi. Where there is a temple for Thirumal, the place is called Vishnu Kanchi. Where there is a temple for jains the place is called Samana Kanchi.
Thus Kanchi is a city where there is a blend of art and tradition.