நோபல் பரிசு பெற்ற தமிழர்
பாட அறிமுகம்
Introduction to Lesson
நோபல் பரிசு என்பது உலக அளவில் தரப்பெறும் பரிசு ஆகும். இது 1901 ஆம் ஆண்டு முதல் தரப்பெறுகிறது.
இயற்பியல் (PHYSICS), வேதியியல் (CHEMISTRY), உடற்கூறு இயல் (PHYSIOLOGY), (அல்லது) மருத்துவ இயல் (MEDICINE), இலக்கியம் (LITERATURE), அமைதி (PEACE) ஆகிய துறைகளில் இப்பரிசு வழங்கப் படுகிறது. இந்தத் துறைகளில் சிறப்பான அறிஞர்களுக்கு இப்பரிசு தரப் பெறுகிறது.
1968 ஆம் ஆண்டு முதல் இப்பரிசு பொருளியல் துறைக்கும் தரப் பெறுகிறது.
நோபல் பரிசு பதக்கம், சான்றிதழ், பணப்பரிசு கொண்டது.
இப்பரிசை இயற்பியல் துறைக்காக ஒரு தமிழர் பெற்றார். அவரைப் பற்றியது இப்பாடம்.