நோபல் பரிசு பெற்ற தமிழர்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இங்கிலாந்துக்கு இராமன் ---------- வழியாகச் சென்றார்.
இங்கிலாந்துக்கு இராமன் கடல் வழியாகச் சென்றார்.
2. சூரியக் கதிர்கள் கடலில் உள்ள -------------- மீது படுவதால் கடல் நீல நிறமாகத் தெரிகிறது.
சூரியக் கதிர்கள் கடலில் உள்ள பொருட்கள் மீது படுவதாலும் கடல் நீல நிறமாகத் தெரிகிறது.
3. இராமன் ------------- விளைவைக் கண்டுபிடித்தார்.
இராமன் இராமன் விளைவைக் கண்டுபிடித்தார்.
4. இராமன் ------------ பரிசு பெற்ற தமிழர். ........................................
இராமன் நோபல் பரிசு பெற்ற தமிழர்.
5. இராமன் -------- துறையில் அறிஞர் ஆவார்.
இராமன் இயற்பியல் துறையில் அறிஞர் ஆவார்.
6. இராமன் பெயரில் -------- என்ற ஊரில் ஓர் ஆய்வு நிறுவனம் உள்ளது.
இராமன் பெயரில் பெங்களூர் என்ற ஊரில் ஓர் ஆய்வு நிறுவனம் உள்ளது.
7. இராமன் இந்திய அரசின் ------- பிரிவில் முதலில் வேலைக்குச் சேர்ந்தார்.
இராமன் இந்திய அரசின் கணக்குப் பிரிவில் முதலில் வேலைக்குச் சேர்ந்தார்
8. இராமன் முதலில் ------------ பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
இராமன் முதலில் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
9. இராமன் சென்னையில் உள்ள -------- கல்லூரியில் கல்வி கற்றார்.
இராமன் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் கல்வி கற்றார்.
10. இராமன் நோபல் பரிசு பெற்ற ஆண்டு----------
இராமன் நோபல் பரிசு பெற்ற ஆண்டு 1930