நோபல் பரிசு பெற்ற தமிழர்

நோபல் பரிசு பெற்ற தமிழர்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

இது அறிவியல் கண்டுபிடிப்புகளின் காலம், அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைத் தந்துள்ளன.

உலகச் செய்திகளை மக்கள் உடனுக்கு உடன் தெரிந்து கொள்கின்றனர். வேறு வேறு நாட்டு மனிதர்கள் நேரில் பேசுவது போலப் பேசிக் கொள்கின்றனர்.

கடலைக் கடக்க முடிகிறது. வானத்தில் பறக்க முடிகிறது. இன்னும் பல பயன்கள் உள்ளன.

இந்த அறிவியல் நூற்றாண்டில் தமிழர்களும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர். இந்தப் பாடம் அவர்களுள் ஒருவர் பற்றியது.