நோபல் பரிசு பெற்ற தமிழர்

நோபல் பரிசு பெற்ற தமிழர்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  இராமன் எந்த ஊரில் பிறந்தார்?

இராமன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.

2.  இராமன் சென்ற நாடு எது?

இராமன் சென்ற நாடு இங்கிலாந்து.

3.  இராமன் கண்டுபிடிப்பின் பெயர் என்ன?

இராமன் கண்டுபிடிப்பின் பெயர் "இராமன்விளைவு".

4.  இராமன் எந்தப் பரிசைப் பெற்றார்?

இராமன் நோபல் பரிசைப் பெற்றார்.

5.  இராமன் எந்தப் பட்டத்தை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெற்றார்?

இராமன் 'சர்'என்னும் பட்டத்தை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெற்றார்.

6.  நோபல் பரிசு எத்தனை ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது?

நோபல் பரிசு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.

7.  இராமன் எந்த நகரங்களில் எல்லாம் வேலை செய்தார்?

இராமன் கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வேலை செய்தார்.

8.  கடல் ஏன் நீலநிறமாகத் தெரிகிறது?

கடல் நீரில் உள்ள சில துகள்களின் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்கள் சிதறுவதால், கடல் நீல நிறமாகத் தெரிகிறது.

9.  இராமன் நோபல் பரிசை எந்த ஆண்டு பெற்றார்?

1930 ஆம் ஆண்டு இராமன் நோபல் பரிசு பெற்றார்.

10.  நோபல் பரிசில் எவை எல்லாம் இடம் பெறும்?

நோபல் பரிசில் பதக்கம், சான்றிதழ், பணப்பரிசு ஆகியன இடம்பெறும்.