யாப்பு, அணி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. யாப்பில் பா ------------ வகைப்படும்.
யாப்பில் பா ஐந்துவகைப்படும்.
2. யாப்பின் பா வகைகள் ------------, -------------, ----------, ---------- என்பனவாகும்.
யாப்பின் பா வகைகள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மருட்பா என்பனவாகும்.
3. உவமை அணி என்பது ஒரு பொருளுக்கு --------------- மற்றொரு பொருளைச் சொல்வது.
உவமை அணி என்பது ஒரு பொருளுக்கு உவமையாக மற்றொரு பொருளைச் சொல்வது.
4. உவமை அணி -------------, ------------, ------------, ---------- நான்கு பகுதிகளைக் கொண்டது.
உவமை அணி ஒப்பாகச் சொல்லப்படும் பொருள், உண்மைப்பொருள் பொதுப்பண்பு, உவம உருபுநான்கு பகுதிகளைக் கொண்டது.
5. போல என்பது ------------ ஆகும்.
போல என்பது உவம உருபு ஆகும்.
6. தமிழில் இலக்கணம் ------------ வகைப்படும்.
தமிழில் இலக்கணம் ஐந்துவகைப்படும்.
7. செய்யுளில் யாப்பு என்றால் ------------ என்று பொருள்.
செய்யுளில் யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள்.
8. செய்யுளில் மேலும் இனிமை சேர்ப்பது ----------- ஆகும்.
செய்யுளில் மேலும் இனிமை சேர்ப்பது அணி இலக்கணம்,ஆகும்.
9. வெண்பா என்பது --------- அடிகளைக் கொண்ட செய்யுளாகும்.
வெண்பா என்பது நான்குஅடிகளைக் கொண்ட செய்யுளாகும்.
10. கல்வி ---------- மம்மர் அறுக்கும் மருந்து.
கல்வி போல்மம்மர் அறுக்கும் மருந்து.