யாப்பு
பாடம்
Lesson
’யாப்பு’ - என்றால் கட்டுதல் என்று பொருள். செய்யுள் பாடுவதற்கான உறுப்புகள் (பகுதிகள்) பல. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி தொடை என்பன. இவை கொண்டு எழுதப்படுவது, யாக்கப்படுவது (கட்டப்படுவது) மரபுக்கவிதையாகும்.
மரபுக்கவிதை மொத்தம் நான்கு வகைப்படும்.
அவை
1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா
5. மருட்பா
என்பன.
நம் பாடப்பகுதியில் உள்ள செய்யுள்பகுதியில் வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றில் அமைந்த பாடல்கள் உள்ளன.
வெண்பா
தாயே! உயிரே! தமிழே! நினைவணங்கும்
சேயேன் பெறற்குஅரிய செல்வமே - நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்கு
இலைஎன்றால் இன்பம்எனக்கேது
ஆசிரியப்பா
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!
வெண்பா, ஆசிரியப்பா என்று கண்டறிவது எவ்வாறு என்பதை அடுத்த பாடநிலைகளில் அறியலாம்.