முகப்பு |
முல்லை (தளவம், மௌவல்) |
59. முல்லை |
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, |
||
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, |
||
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல |
||
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, |
||
5 |
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து |
||
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து |
||
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை |
||
நுண் முகை அவிழ்ந்த புறவின் |
||
10 |
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. | உரை |
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
|
61. குறிஞ்சி |
கேளாய், எல்ல தோழி! அல்கல் |
||
வேணவா நலிய, வெய்ய உயிரா, |
||
ஏ மான் பிணையின் வருந்தினெனாக, |
||
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, |
||
5 |
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், |
|
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், |
||
'படு மழை பொழிந்த பாறை மருங்கில் |
||
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், |
||
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் |
||
10 |
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. | உரை |
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்
|
69. முல்லை |
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
||
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
||
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
||
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
||
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
||
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
||
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
||
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
||
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
||
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! | உரை | |
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|
115. முல்லை |
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
||
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
||
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் |
||
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, |
||
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
||
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
||
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
||
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
||
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
169. முல்லை |
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்! |
||
வருவம்' என்னும் பருவரல் தீர, |
||
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி- |
||
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி |
||
5 |
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை |
|
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் |
||
வன் கை இடையன் எல்லிப் பரீஇ, |
||
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை |
||
மறுகுடன் கமழும் மாலை, |
||
10 |
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே. | உரை |
வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.
|
248. முல்லை |
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ, |
||
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப, |
||
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல் |
||
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி, |
||
5 |
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், |
|
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் |
||
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் |
||
இன மயில் மடக் கணம் போல, |
||
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்
|
361. முல்லை |
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி |
||
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; |
||
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, |
||
படு மழை பொழிந்த தண் நறும் புறவில், |
||
5 |
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
|
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் |
||
தந்தன நெடுந்தகை தேரே; என்றும் |
||
அரும் படர் அகல நீக்கி, |
||
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. | உரை | |
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
|
366. பாலை |
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் |
||
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் |
||
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் |
||
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, |
||
5 |
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
|
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த |
||
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் |
||
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, |
||
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை |
||
10 |
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
|
வட புல வாடைக்குப் பிரிவோர் |
||
மடவர் வாழி, இவ் உலகத்தானே! | உரை | |
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. | உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|
369. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, |
||
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, |
||
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை |
||
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை |
||
5 |
இன்றும் வருவது ஆயின், நன்றும் |
|
அறியேன் வாழி-தோழி!-அறியேன், |
||
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, |
||
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் |
||
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் |
||
10 |
சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
|
நிறை அடு காமம் நீந்துமாறே. | உரை | |
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|