முகப்பு |
காக்கை |
31. நெய்தல் |
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
||
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
||
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
||
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
||
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
||
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
||
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
||
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
||
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
||
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
231. நெய்தல் |
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் |
||
கைதொழும் மரபின் எழு மீன் போல, |
||
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, |
||
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் |
||
5 |
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும், |
|
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, |
||
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் |
||
கானல்அம் கொண்கன் தந்த |
||
காதல் நம்மொடு நீங்காமாறே. | உரை | |
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்
|
258. நெய்தல் |
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ |
||
செல்வல்-கொண்க!-செறித்தனள் யாயே- |
||
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் |
||
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார், |
||
5 |
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
|
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, |
||
அகல் அங்காடி அசை நிழல் குவித்த |
||
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை |
||
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் |
||
10 |
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் |
|
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே. | உரை | |
தோழி செறிப்பு அறிவுறீஇயது.-நக்கீரர்
|
272. நெய்தல் |
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், |
||
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த |
||
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, |
||
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, |
||
5 |
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் |
|
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன் |
||
நல்காமையின், நசை பழுதாக, |
||
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய் |
||
அம்பல் மூதூர் அலர்ந்து, |
||
10 |
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
|
281. பாலை |
மாசு இல் மரத்த பலி உண் காக்கை |
||
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, |
||
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
||
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் |
||
5 |
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
|
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, |
||
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், |
||
தாம் நம் உழையராகவும், நாம் நம் |
||
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, |
||
10 |
துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
|
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே. | உரை | |
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்
|
343. பாலை |
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி |
||
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் |
||
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் |
||
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, |
||
5 |
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை |
|
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய, |
||
படையொடு வந்த பையுள் மாலை |
||
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து |
||
அரும் பொருட் கூட்டம் வேண்டிப் |
||
10 |
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? | உரை |
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
|
345. நெய்தல் |
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய் |
||
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென, |
||
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல், |
||
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன, |
||
5 |
வெளிய விரியும் துறைவ! என்றும், |
|
அளிய பெரிய கேண்மை நும் போல், |
||
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் |
||
தேறா நெஞ்சம் கையறுபு வாட, |
||
நீடின்று விரும்பார் ஆயின், |
||
10 |
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே! | உரை |
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்
|
358. நெய்தல் |
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
||
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
||
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
||
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
||
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
||
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
||
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
||
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
||
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
||
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. | உரை | |
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. | உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|