|
|
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
|
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
|
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
|
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
|
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
|
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
|
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
|
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. |
உரை |
|
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
|
''மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன், |
|
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி |
|
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும் |
|
வருந்தினன்'' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்; |
5 |
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, |
|
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு |
|
அரிய-வாழி, தோழி!-பெரியோர் |
|
நாடி நட்பின் அல்லது, |
|
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே. |
உரை |
|
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்
|
|
''படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை, |
|
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை, |
|
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து, |
|
கல்லுடைப் படுவில் கலுழி தந்து, |
5 |
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், |
|
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர் |
|
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை, |
|
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் |
|
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?'' என |
10 |
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, |
|
நல் அக வன முலைக் கரை சேர்பு |
|
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே. |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.- இளவேட்டனார்
|
|
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த |
|
பறியாக் குவளை மலரொடு காந்தள் |
|
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, |
|
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் |
5 |
அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
|
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் |
|
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, |
|
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, |
|
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! |
10 |
கடவுள் ஆயினும் ஆக, |
|
மடவை மன்ற, வாழிய முருகே! |
உரை |
|
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி
|
|
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
|
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
|
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
|
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
|
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
|
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
|
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
|
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! |
உரை |
|
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, ''நன்கு ஆற்றுவித்தாய்'' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
|
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, |
|
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, |
|
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் |
|
கல்லக வெற்பன் சொல்லின் தேறி, |
5 |
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, |
|
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, |
|
ஆனாக் கௌவைத்துஆக, |
|
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? |
உரை |
|
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்
|
|
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
|
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
|
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
|
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
|
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
|
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
|
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. |
உரை |
|
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
|
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, |
|
பாட்டம் பொய்யாது பரதவர் பகர, |
|
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் |
|
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு |
5 |
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
|
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க் |
|
கழி சூழ் படப்பைக் காண்டவாயில், |
|
ஒலி காவோலை முள் மிடை வேலி, |
|
பெண்ணை இவரும் ஆங்கண் |
10 |
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. |
உரை |
|
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்
|
|
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
|
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
|
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
|
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
|
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
|
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
|
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. |
உரை |
|
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
|
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட, |
|
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர், |
|
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார், |
|
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப, |
5 |
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் |
|
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச, |
|
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் |
|
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் |
|
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த, |
10 |
நள்ளென் கங்குல், கள்வன் போல, |
|
அகன் துறை ஊரனும் வந்தனன்- |
|
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே. |
உரை |
|
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.-கோண்மா நெடுங்கோட்டனார்
|
|