Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
3.மணிமேகலையின் பழம்பிறப்பு வரலாற்றை எடுத்துரைக்க.
மணிபல்லவத்தில் மணிமேகலை புத்த பீடிகையை வணங்க அவளுக்குப் பழம்பிறப்பு உணர்வு வந்து சேர்கிறது. பழம்பிறப்பில் அசோதர நகர் அரசன் இரவிவர்மனுக்கும் அவன் மனைவி அமுதபதிக்கும் ‘இலக்குமி’ என்னும் மகள் பிறக்கிறாள். இலக்குமி அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணக்கிறாள். திட்டிவிடம் எனும் பாம்பு தீண்டி இராகுலன் இறக்க, அவன்பால் தீராக் காதல் கொண்டிருந்த இலக்குமி தீயினுள் பாய்ந்து இறந்து படுகிறாள். இந்த இலக்குமியே மணிமேகலை. அவள் கணவன் இராகுலனே உதயகுமரன்.