தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    மணிமேகலைக்கு உதயகுமரன்பால் இருந்த காதலைச் சாத்தனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

    உதயகுமரன் தேரொலி கேட்ட அளவில் மணிமேகலை நெஞ்சு நெகிழ்ந்து “என் செய்வேன்” என்கிறாள். பளிக்கறைக்குள் இருந்து அவனைக் காணுகிற போது காதல் அரும்புகிறது. அவளைக் கற்பில்லாதவள், விலைமகள் என இகழ்ந்துரைத்தும், அவன் பின்னால் தன் நெஞ்சு செல்வதைக் கூறி வருந்துகிறாள். உதயகுமரன் அவளை “நற்றவம் ஏற்றது ஏன்” எனக் கேட்டபோது, “என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன், தன்னடி தொழுதலும் தகவு என” வணங்குகிறாள். உதயகுமரன் இறந்த பின் கூட “வெவ்வினை உருப்ப விளிந்தனையோ காதல” எனப் புலம்புகிறாள். இப்படிப் பலவிடத்தும் மணிமேகலையின் காதலை வெளிப்படுத்துகிறார் சாத்தனார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:18:43(இந்திய நேரம்)