தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periapuranam - Kappia Arimugam - Introduction Page

  • பாடம் - 1

    A01121  பெரியபுராணம் : காப்பிய அறிமுகம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தமிழிலுள்ள பெரியபுராணம் : காப்பிய அறிமுகம் பற்றியது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழாரின் வரலாறு பற்றியும், அவர் காலம் பற்றியும், பெரியபுராணத் தோற்றம் பற்றியும், பெரியபுராணக் காப்பியக் கொள்கை, காப்பிய அமைப்பு, அடியார் வரலாறு பற்றியும் இப்பாடம் விவரித்துக் கூறுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தின் கற்றல் செய்கைகளில் ஈடுபட்டு இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • தமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகிய பெரியபுராணம் பற்றிய பொதுவான செய்திகளை அறியலாம்.

    • பெரியபுராணத்தின் ஆசிரியரான சேக்கிழாரின் வரலாற்றையும் பெரியபுராணம் இயற்றப்படுவதற்குரிய காரணங்களையும், அக்காப்பியத்தின் அரங்கேற்றம் பற்றிய செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

    • பெரியபுராணத்தின் காலம் பற்றிய செய்திகளையும், அக்காப்பியத்தின் மூலங்கள் பற்றிய செய்திகளையும் அறியலாம்.

    • பெரியபுராணத்தில் காப்பியக் கொள்கைகள் எவ்விதம் அமைந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    • பெரியபுராணக் காப்பிய அமைப்பையும், அடியார் வரலாறு சிலவற்றையும் சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.

    • தமிழ் இலக்கிய உலகிற்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் பெரியபுராணம் அளித்த பங்களிப்பை இனம் காணலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:23:25(இந்திய நேரம்)