Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. நாயனார் “தத்தா நமர்” என்று கூறிய நிகழ்ச்சியை விவரிக்க.
சிவனடியார் வேடத்தோடு வந்த முத்தநாதன் உள்ளே நுழைந்த போதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான். முத்தநாதன் செய்த செயலைக் கண்டு நொடிப் பொழுதில் அரசனை அணுகினான். அங்கிருந்த முத்தநாதனை வாளினால் கொல்லப் போனான். அப்பொழுது குருதி கொப்புளிக்க வீழ்ந்து கொண்டிருந்த நாயனார் “தத்தனே இவர் நம்மவர் சிவனடியார்” என்று தடுத்துச் சாய்ந்தார்.