தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன மூவிடப் பெயர்கள். இப்பெயர்களுடன் அமையும் தொடர்கள் இவற்றுக்கேற்ற வினைமுற்றுகளைப் பெற்றிருக்கும். இவற்றுள் தன்மை வினைமுற்றுகள் பற்றி முந்திய பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் முன்னிலை வினைமுற்றுகள் பற்றிக் காண்போம். வந்தாய், சொல்கிறாய், செல்வாய் என்பன போன்ற வினைமுற்றுச் சொற்கள் முன்னிலையில் உள்ள ஒருவருடன் பேசும்போது இடம் பெறுவனவாகும். இவை எவ்வாறு தொடர்களில் வருகின்றன, இவ் வினைமுற்றுகளின் வகைகள் யாவை, விகுதிகள் யாவை என்பன போன்றவற்றை இப்பாடத்தில் விரிவாக அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:56:24(இந்திய நேரம்)