Primary tabs
-
2.3 சாரியைகள்
இங்கு இடைச்சொல் வரிசையில் மூன்றாவதாக உள்ள சாரியைகள் பற்றிக் காண்போம். பகுபத உறுப்புகள் ஆறனுள் சாரியையும் ஒன்று என்பதை ஏற்கெனவே படித்துள்ளீர்கள்.
சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இஃது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.
ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ (சொல்லோ), வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும் போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல் உண்டு. வாராதிருத்தலும் உண்டு.
எடுத்துக்காட்டு
விகுதிப்புணர்ச்சியில் சாரியை
நடந்தனன் = நட + த்(ந்) + த் + அன் + அன்
நட-பகுதித்-சந்தி(ந்)-விகாரம்த்-இறந்த கால இடைநிலைஅன்-சாரியைஅன்-விகுதிஅன் சாரியை
பெற்று வந்ததுநடந்தான் = நட + த் (ந்) + த்+ ஆன்
நட-பகுதித்(ந்)-சந்தித்-இறந்த கால இடைநிலைஆன்-விகுதிஅன் சாரியை
பெறாது வந்ததுபதப்புணர்ச்சியில் சாரியை
ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் இணைவது பதப்புணர்ச்சி எனப்படும்.
புளி+காய்=புளியங்காய்-அம் சாரியைநெல்+குப்பை=நெல்லின் குப்பை-இன் சாரியை
புளி+கறி=புளிக்கறிநெல்+குப்பை=நெல் குப்பைசாரியை பெறாது
வந்தவைஉருபு புணர்ச்சியில் சாரியை
ஒரு சொல்லுடன் ஒரு வேற்றுமை உருபு இணைவது உருபு புணர்ச்சி எனப்படும்.
அவ்+ஐ-அவற்றை
(அவ்+அற்று+ஐ)-அற்றுச் சாரியை
பெற்று வந்தது.தன்+ஐ-தன்னை-சாரியை பெறாது
வந்தது
ஆவினுக்கு -ஆ+இன்+உ+குமரத்தினுக்கு -மரம்+அத்து+இன்+குஇன், உ, அத்து
ஆகிய பல
சாரியைகள்
வந்தன.இவ்வாறு சொற்கள் புணரும்போது சாரியைகள் இடையில் தோன்றுவதைக் கண்டீர்கள்.
• சாரியை வகைகள்
சாரியைகள் இரண்டு வகைப்படும் என்பர்.
1) பொதுச் சாரியைகள்
2) எழுத்துச் சாரியைகள்
ஒரு பதம் விகுதியுடன் புணரும்போதோ, ஒரு பதம் மற்றொரு பதத்துடன் புணரும்போதோ, ஒரு பதம் வேற்றுமை உருபுடன் புணரும்போதோ இடையே சாரியைகள் தோன்றும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகள் என்று (நன்னூல் நூ. 243) குறிப்பிடுகின்றது. அச்சூத்திரத்தில் ‘பிற’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு தன், தான், தாம், ஆம், ஆ, து என்பனவும் பொதுச் சாரியைகளாகக் காட்டப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
மேலே குறித்தவற்றுள் அற்று, இற்று, அத்து போன்றவை இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
வந்தனன்வா+த்+(ந்)+த்+அன்+அன்அன் விகுதிப் புணர்ச்சியில் வந்ததுபதிற்றுப்பத்துபத்து + இற்று + பத்துஇற்று பதப் புணர்ச்சியில் வந்ததுபலவற்றைபல + அற்று + ஐஅற்றுச் சாரியையும், அத்துச் சாரியையும்மரத்தால்மரம் + அத்து + ஆல்வேற்றுமைப் புணர்ச்சியில் வந்தனதம், தான், ஆம், ன் ஆகிய சாரியைகள் எவ்வாறு சொற்களில் இணைந்து வருகின்றன என்பதைக் காணலாம்.
எல்லார்தம்மையும்-தம் - சாரியைஅவன்தான்-தான் - சாரியைபுற்று + சோறு - புற்றாஞ்சோறு-ஆம் - சாரியைஆன் (பசு)-ன் - சாரியைஇவ்வாறு சாரியைகள் சொல்லுக்கு இடையிலும் சில இடங்களில் சொல்லுக்கு இறுதியிலும் சார்ந்து நின்று வருவதால் இவை பொதுச் சாரியைகள் என்றாயின.
உயிர், மெய் முதலான எழுத்துக்களைச் சுட்டும்போது அந்த எழுத்துக்களோடு சில சாரியைகளைச் சேர்த்துச் சொல்லுதல் இலக்கண மரபு.
அ என்ற எழுத்தை அகரம் என்று சொல்லுதல்
ஆ என்ற எழுத்தை ஆகாரம் என்று சொல்லுதல்அ, ஆ என்ற எழுத்துக்களைச் சுட்ட கரம், காரம் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அல்லவா? அந்த இரண்டு சொற்களும் (கரம், காரம்) சாரியைகள் ஆகும். இவை எழுத்தைச் சுட்ட வந்ததால் எழுத்துச் சாரியை என்பர். ஏனைய எழுத்துகளைச் சுட்டி உரைக்க வரும் சாரியைகளைக் கீழே காணலாம்.
எழுத்துக்கள்சாரியைபெயர்குறில் எழுத்துகள்
அ, இ, உகரம்அகரம், இகரம்,
உகரம்...நெடில் எழுத்துகள்
ஆ, ஈ, ஊகாரம்ஆகாரம், ஈகாரம்,
ஊகாரம்ஐ, ஓளகாரம்/கான்ஐகாரம் ஒளகாரம்
ஐகான் ஒளகான்மெய் எழுத்துகள்அக,ச,ட,த,ப,றஆய்தம்கான்/கேனம்அஃகான் அஃகேனம்உயிர்மெய்யெழுத்துகள்கரம்ககரம், சகரம்,
ஞகரம்....மெய் எழுத்தைக் க எனக் குறிப்பிடுவதோடு ககரம் எனவும் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடும் போது அ, கரம் என இரு சாரியைகள் சேர்ந்து வருகின்றன எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு எழுத்துகளைச் சுட்டுவதற்குப் பயன்படும் கரம், காரம், கான், கேனம் ஆகியவை சாரியைகள் என்று அழைக்கப்படுகின்றன. எழுத்துகளுள் உயிர்மெய் நெடில்கள் சாரியை சேர்த்து வழங்கப்படுவதில்லை என்பதை அறியவும்.