தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021343-உயிர் உடைய பொருள் வகைகள்

  • 4.3 உயிர் உடைய பொருள் வகைகள்

    உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம்.

    • ஓர் அறிவு உயிர்

    மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.

    எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம்

    • ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்)

    மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.

    எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு

    • மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்)

    மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்.

    எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு

    • நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்)

    மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.

    எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு

    • ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்)

    மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.

    எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர்

    இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1)
    உரிச்சொல் என்றால் என்ன?
    2)
    உரிச்சொல்லின் இயல்பு யாது?
    3)
    பண்பு எனப்படுவது யாது?
    4)
    உயிர்ப்பொருள்கள் எத்தனை வகைப்படும்?
    5)
    மூன்றறிவு உடைய உயிர்களுள் ஒன்றினைக் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 14:44:32(இந்திய நேரம்)