தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    3. காரைக்காலம்மையார் பாடிய நூல்களின் பெயர்களையும் அவற்றின் விளக்கத்தையும் தருக.

    1) அற்புதத் திருவந்தாதி - சிவனின் சிறப்புகள் பற்றிப்பாடும் நூல். ஒரு பாடலின் கடைசியில் வரும் எழுத்தோ, அசையோ, சீரோ அடுத்த பாடலுக்கு முதலாக வருமாறு, அந்தாதி முறையில் அமைந்தது, 101 வெண்பாக்களைக் கொண்டது.

    2) திரு இரட்டை மணிமாலை - சிவனைப் போற்றும் நூல். வெண்பா, கட்டளைக் கலிப்பா எனும் இருவகைப் பாக்களால் ஆக்கப்பட்ட சிறப்புமிக்க பாமாலை.

    3) திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் - திருவாலங்காட்டில் சிவனார் ஆடும் திருநடனத்தைப் பற்றிப் பாடும் பழைய முதிர்ந்த பாடல்களைக் கொண்ட நூல்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 17:09:47(இந்திய நேரம்)