Primary tabs
- இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
நாட்டுப்புற இலக்கியத்தை ஒட்டு மொத்தமாகப் படிக்கும் பொழுது மிகப் பரந்து பட்டதாகத் தோன்றும். எனவே இவ்விலக்கியத்தை ஏதாவது ஒரு கருத்தியல் (ideology) அடிப்படையில் பகுத்தும் தொகுத்தும் படிக்கும் பொழுது சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு இந்தப் பாடப்பகுதி நாட்டுப்புற இலக்கியத்தை வகைமைப் படுத்தி விளக்கும் பணியைச் செய்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
நாட்டுப்புற இலக்கியத்தின் வகைமை - வகை இவ்விரண்டிற்குமான வேறுபாட்டை உணரலாம்.நாட்டுப்புற இலக்கியத்தின் வகைமைகள் எவை? அவற்றுள் வகைகள் எவை? எவை? என்று அறிந்து கொள்ளலம்.ஒவ்வொரு பிரிவின் சிறப்புகளையும் புரிந்து கொள்ள முடியும்.வகைமை - வகைப்படுத்தலுக்கான காரணிகளையும் அணுகுமுறைகளையும் அறிந்து கொள்ள முடியும்.நாட்டுப்புறவியல் இலக்கியத்தின் தனித்தன்மைகளைப் புரிந்து கொள்ள இயலும்.நாட்டுப்புறவியல் இலக்கிய ஆய்வில் முனைவதற்கு இப்பாடப்பகுதி உறுதுணை செய்யும்.