Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
நாட்டுப்புற மரபுகளை அறிமுகம் செய்கிறது.
நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு நிகழ்த்தப்பட்டு வரும் பல்வேறு வகையான நாட்டுப்புறச் சடங்கு முறைகளை எடுத்துரைக்கிறது.
நாட்டுப்புற மக்களின் வழக்கில் உள்ள நம்பிக்கைகளை விளக்கி உரைக்கிறது.
நாட்டுப்புற மக்களின் வாழ்வில் சடங்கு மற்றும் நம்பிக்கைகள் பெறும் இடத்தினையும், அவற்றின் வாயிலாகத் தமிழர் பண்பாடு கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தினையும் விவரிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
நாட்டுப்புற மரபு என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
நாட்டுப்புற மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சடங்கு முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
சடங்குகளின் தன்மை, நிகழ்த்தப்படும் விதம், நோக்கம் போன்றவை குறித்து அறியலாம்.
நாட்டுப்புற மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளையும் அவற்றிற்கான பின்புலங்களைப் பற்றியும் புரிந்து கொள்ளலாம்.
சடங்குகளும் நம்பிக்கைகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.