Primary tabs
-
பாடம் - 3
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?நாட்டுப்புற மருத்துவத்தை அறிமுகம் செய்கிறது. நாட்டுப்புற மருத்துவ முறைகளை வகைப்படுத்தி விளக்குகிறது. நாட்டுப்புற இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், மந்திர மருத்துவம் இவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை எடுத்துரைக்கிறது. நாட்டுப்புற மருத்துவம் சார்ந்த வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகளை விவரிக்கிறது. நாட்டுப்புற மருத்துவத்தின் தனித் தன்மைகளையும் அவற்றின் வழி வெளிப்படும் தமிழரின் பழமையான மருத்துவ மரபையும் அடையாளம் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழரின் நாட்டுப்புற மருத்துவ முறைகளையும் அவற்றின் மரபையும் அறிந்து கொள்ளலாம்.
நாட்டுப்புற மருத்துவத்தின் நிலைபேற்றிற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழர் வாழ்வில் உணவே மருந்தாக விளங்கிவரும் தன்மையை அறிந்து பின்பற்றலாம்.
நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவத்தின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொள்ளலாம்.
எளிமையான நாட்டுப்புற மருத்துவ முறைகளைப் பின்பற்றி உடல் நலம் பேணலாம்.
நாட்டுப்புற மருத்துவத்திற்கும் நவீன மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடுகளையும் மரபு மருத்துவத்தின் சிறப்புகளையும் உணர்ந்து கொள்ளலாம்.