தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.5 தொகுப்புரை

  • 1.5 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரையிலும் சிற்றிலக்கியம் என்பது குறித்துப் பார்த்தவற்றைத் தொகுத்துக் காண்போமா?

    தமிழ் மொழியில் பல இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கதும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பதுமாகச் சிற்றிலக்கியம் திகழ்கின்றது.

    சிற்றிலக்கியம் என்ற பொதுவான இலக்கிய வகையுள் பல இலக்கிய வகைகள் காணப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் பல நிலைகளில் பாகுபாடு செய்யப்படுகின்றன. அரசியல், சமய, சமுதாயக் காரணங்களால் சிற்றிலக்கிய வகைகள் பல தோன்றி உள்ளன. அவை இலக்கிய வகைமை பெற்றுள்ளன.

    1.

    சிற்றிலக்கியங்களைப் பொருள் அடிப்படையில் எவ்வாறு பாகுபாடு செய்யலாம்?

    2.

    பாடல் எண்ணிக்கை அடிப்படையில் அமையும் சிற்றிலக்கிய வகைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

    3.

    பாதாதி கேசம் என்ற இலக்கிய வகையைக் குறித்து விளக்குக.

    4.
    வண்ணப்பாட்டு என்றால் என்ன?
    5.

    சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சிற்றிலக்கிய வகை யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 10:18:43(இந்திய நேரம்)