Primary tabs
-
5)
தமிழ் இலக்கண நூல்கள், மொழியியல் கருத்துகளை வெளிப்படுத்துவதை விளக்குக.
பொதுவாக, இலக்கண நூலாசிரியர்கள் எழுத்துவடிவில் அமைந்த இலக்கியத்திற்கு மட்டுமே இலக்கணம் கூறுவர். எழுத்தின் ஒலிவடிவத்தை ஆராய்கின்ற அறிவியல் நோக்கோடு தமிழ் இலக்கண ஆசிரியர்கள் தங்கள் நூல்களைப் படைத்தனர். ஒலிகளின் தோற்றம் குறித்தும் தோன்றும் இடங்கள் குறித்தும் இக்கால மொழியியலார் கூறும் கருத்துகளைத் தமிழ் இலக்கண நூல்கள் பழங்காலத்திலேயே கூறியுள்ளன.