தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காலங் காட்டும் விகுதிகள்

 • 6.3. காலம் காட்டும் விகுதிகள்

  வினைப் பகுபதங்களில் இடைநிலைகள் காலத்தைச் சுட்டுவன: அவை மூன்று காலத்திற்கும் தனித்தனி இடைநிலைகளாக அமைந்துள்ளன. என்றாலும் சில வினைப் பகுபதங்களில் விகுதிகளும் காலத்தைக் காட்டும் பணியைச் செய்கின்றன என்பதை அறிய முடிகிறது. (நன்னூல், நூற்பா, 145)

  இனி, இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.

  (1)
  று, றும் இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.
  சென்று (சென்றேன்) - று சென்றும் (சென்றோம்) - றும்
  இறந்தகாலம்
  சேறு (செல்வேன்) - று சேறும் (செல்வோம்) - றும்
  எதிர்காலம்
  (2)
  து, தும்: இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.
  வந்து (வந்தேன்) - து வந்தும் (வந்தோம்) தும்
  இறந்தகாலம்
  வருது (வருவேன்) - து வருதும்(வருவோம்) தும்
  எதிர்காலம்
  (3)
  டு, டும்: இறந்தகாலம் காட்டும்
  உண்டு (உண்டேன்) - டு உண்டும் (உண்டோம்) - டும்
  இறந்தகாலம்
  (4)
  கு, கும் எதிர்காலம் காட்டும்
  உண்கு (உண்பேன்) - கு உண்கும் (உண்போம்) - கும்
  எதிர்காலம்
  (5)
  மின், ஈர், உம், ஆய் எனும் ஏவல்விகுதிகள், வியங்கோள் விகுதிகள், இ, மார் விகுதிகள்

  உண்மின் - மின் உண்ணீர் - ஈர் உண்ணும் - உம் உண்ணாய் - ஆய்

  எதிர்காலம்
  உண், உண்ணிய, உண்ணிய
  -
  எதிர்காலம்
  சேறி (செல்வாய்)
  -
  எதிர்காலம்
  உண்மார் (உண்பதற்காக)
  -
  எதிர்காலம்
  (6)
  ப விகுதி : இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.
  உண் (உண்டார்)
  -
  இறந்தகாலம்
  உண் (உண்பார்)
  -
  எதிர்காலம்
  (7)
  செய்யும் எனும் வாய்பாட்டின் உம் விகுதி
  அவன் உண்ணும்
  -
  நிகழ்காலம் (உண்கிறான்)
  அவள் உண்ணும்
  -
  எதிர்காலம் (உண்பாள்)
  (8)
  ஆ விகுதி :எதிர்மறைப் பொருளில் மூன்றுகாலத்துக்கும் வரும்
  உண்ணா
  -
  இறந்தகாலம்
  உண்ணா
  -
  நிகழ் காலம்
  உண்ணா
  -
  எதிர்காலம்

  6.3.1 பகுதி இரட்டித்துக் காலம் காட்டுதல்

  கு, டு, று என்னும் எழுத்துகளை ஈற்றில் கொண்ட ‘புகு’, ‘தொடு’, ‘உறு’ என்பன போன்ற பகுதிகள் மெய் இரட்டித்து இறந்த காலத்தைக் காட்டும்.

  புகு+ஆன் - புக்கான் விடு+ஆள் - விட்டாள் பெறு+ஆர் - பெற்றார்
  இறந்தகாலம்

  நெட்டெழுத்தைச் சார்ந்து வரும் ‘கு’ என்ற ஈற்றை உடைய சில சொற்களும் மெய் இரட்டித்து, இறந்தகாலத்தைக் காட்டும்.

  போடு + ஆன் - போட்டான்

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 18:09:51(இந்திய நேரம்)