தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    நன்னூலார் எழுத்திலக்கணத்தைப் பன்னிரு வகையாகப் பிரித்துக் கொண்டார். அவற்றுள் இறுதி வகையாகிய புணர்ச்சியை உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரித்து விளக்குகிறார். உயிர் ஈற்றுப் புணரியலில் அவர் கூறியுள்ள புணர்ச்சி விதிகளை இதற்கு முந்தைய பாடங்களில் பார்த்தோம். இனி, மெய் ஈற்றுப் புணரியலில் அவர் கூறும் புணர்ச்சி விதிகளைப் பார்ப்போம்.

    மொழிக்கு இறுதியில் வல்லின மெய்கள் வாரா. மெல்லின மெய்களுள் ஙகரம் நீங்கிய ஏனைய ஐந்தும், இடையின மெய்கள் ஆறுமாக மொத்தம் பதினொரு மெய்கள் மொழிக்கு இறுதியில் வரும். இப்பதினொரு மெய்களும் நிலைமொழியின் இறுதியில் நின்று, வருமொழி முதலில் வரும் உயிர்களோடு புணரும் முறையைப் பொது விதிகள் கொண்டு நன்னூலார் விளக்குகிறார்; பின்னர், வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும் முறையைச் சிறப்பு     விதிகள் கொண்டு மெய்     ஈற்றுப் புணரியலில் விளக்கிக் காட்டுகிறார். அவற்றை இப்பாடத்திலும், இதனைத் தொடர்ந்து வரும் இரண்டு பாடங்களிலும் காண்போம்.

    இப்பாடத்தில் மெய்யின் முன்னர் உயிர்வந்து புணர்வது பற்றி நன்னூலார் குறிப்பிடும் பொதுவிதிகள் முதலில் விளக்கிக் காட்டப்படுகின்றன. அதனை அடுத்து ணகர, னகர ஈறுகளுக்கு அவர் கூறும் சிறப்பு விதிகள் விளக்கிக் காட்டப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:05:28(இந்திய நேரம்)