தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.1 காப்பியங்கள் ஐந்து-ஒரு விளக்கம்

  • 1.1 காப்பியங்கள் ஐந்து-ஒரு விளக்கம்

    சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐந்து பெருங்காப்பியங்கள். இவற்றை இயற்றியவர்கள் யார் தெரியுமா?

    நூலின் பெயர்
    ஆசிரியர்
    சிலப்பதிகாரம்
    இளங்கோவடிகள்
    மணிமேகலை
    சீத்தலைச் சாத்தனார்
    சீவகசிந்தாமணி
    திருத்தக்கதேவர்
    வளையாபதி
    ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
    குண்டலகேசி
    நாதகுத்தனார்

    இவற்றில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமயத்தைச் சார்ந்தவை. எஞ்சிய இரண்டும் பௌத்த சமயத்துக்கு உரியவை. இந்தக் காப்பியங்கள் கதைகளின் வழியாக மக்களுக்குச் சில நீதிகளைச் சொல்லத் தோன்றியவை. இவை தோன்றிய காலம் வருமாறு :

    சிலப்பதிகாரம்
    கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
    மணிமேகலை
    கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
    சீவகசிந்தாமணி
    கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
    வளையாபதி
    கி.பி. பத்தாம் நூற்றாண்டு
    குண்டலகேசி
    கி.பி. பத்தாம் நூற்றாண்டு

    இந்த ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய மூன்றும் முழுவதுமாகக் கிடைக்கின்றன. வளையாபதியில் 72 செய்யுட்களும், குண்டலகேசியில் 224 செய்யுட்களுமே கிடைக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2017 16:31:44(இந்திய நேரம்)