Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
6.தெய்வ வடிவங்களைச் செய்யும் போது சிற்பிகள் கடைப்பிடித்த நெறிகளைக் கூறுக.
மனிதர்களைப் போலத் தெய்வ உருவங்களை உருவாக்கினாலும் மனிதரைப் போல எலும்பும் நரம்பும் தசையமைப்பும் கொண்டவர்களாகத் தெய்வங்களை அமைப்பதில்லை. நான்கு கைகள், ஆறு கைகள், பன்னிரண்டு கைகள், ஆறு முகங்கள், யானைத்தலை போன்ற வேறுபட்ட வடிவங்களின் சிலைகளைப் படைத்தனர். 12 அடி 15 அடி உயரமான சிற்பங்களையும் படைத்தனர். சிற்பங்களிலேயே ஆடை அணிகலன்களை அமைத்தனர்.