தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    அலெக்சாண்டர் என்ற கிரேக்கப் பேரரசன் உலகின் பெரும்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் என்று மிகப் பழைய வரலாறு கூறும். அவனைப் போலவே ஆங்கிலேயரும் உலகின் பல பகுதிகளில் ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் பல நூற்றாண்டுகள் உலகின் பல நாடுகளில் தங்கள் கொடியைப் பறக்க விட்டனர். சின்னஞ்சிறு நாடான இங்கிலாந்து தன் அறிவாலும் முயற்சியாலும் இந்தியா போன்ற பெருநாடுகளை வளைத்துத் தன் ஆட்சியின் கீழே கொண்டு வந்தது. ஐரோப்பியர் தம்மைக் கற்றவர், நாகரிகம் மிக்கவர் என்று கூறிக் கொண்டனர்; எனினும் பிறரை அடிமைப்படுத்துவதில் அவர்கள் மகிழ்ச்சி கண்டனர். இங்கிலாந்து ஒரு 'கடைக்காரர்களின் நாடு' என்று நெப்போலியன் கூறினான். அவர்களின் வாணிகமே அவர்களுக்கு நாடு பிடித்துத் தந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இங்கிலாந்தே வலிமையுடையதாகத் திகழ்ந்தது. இதன் குடியேற்றம் இந்தியாவைப் பல நூற்றாண்டுகள் பாதித்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-10-2017 17:04:30(இந்திய நேரம்)