Primary tabs
- பாடம் - 1இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
ஒரு நாட்டின் வரலாற்றை அறிய நாணயமும் (காசும்) கல்வெட்டும் மிகவும் இன்றியமையாதவை என்பதை உணர்த்துகிறது. பண்டமாற்றுமுறை சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது. கல்வெட்டுகள் கிடைக்கும் இடங்களை விவரிக்கிறது. கல்வெட்டுகள் கூறும் செய்திகளை எடுத்துரைக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்த தமிழ் எழுத்துகள் வட்டெழுத்தாகவும் இன்றைய வரிவடிவ எழுத்திற்கு முன்னோடியாகவும் விளங்கியதைக் காட்டுகிறது. கல்வெட்டில் அரசு ஆணைகள் பொறிக்கப்பட்டதை உணர வைக்கிறது. கல்வெட்டின் அமைப்பு அதில் இடம்பெறும் செய்திகள் போன்றவற்றைத் தெளிவாக விளக்கிச் செல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படிப்பதால் நாட்டு வரலாற்றை அறிய நாணயமும் கல்வெட்டும் எந்த அளவு பயன்தருகின்றன என்று கூற இயலும்.
-
நெடுங்காலம் அழியாமல் இருக்கக் கல்வெட்டு உதவியது என்பதை விளக்க முடியும்.
கல்வெட்டுகள் மலைக்குகைகளிலும், கோயில்களிலும் காணப்பட்ட செய்தியை அறிய இயலும்.
பிராமி, தமிழ், வட்டெழுத்து போன்ற எழுத்துகளைப் பற்றி அறிய முடியும்.
கல்வெட்டின் எழுத்து முறை, கல்வெட்டின் அமைப்பு, கல்வெட்டு மொழிகள், கல்வெட்டின் மூலம் போன்றவற்றை விளக்க முடியும்.
கல்வெட்டின் பாகங்கள், மெய்க்கீர்த்தி முதலியவற்றைக் குறித்து விரிவாகக் கூற இயலும்.