தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு - : விடைகள் II

    4.

    பாங்கி வெளிப்படுத்தும் மூவகைப் புணர்ச்சிகள் யாவை?

    செவிலியிடம் அறத்தொடு நிற்கும் பாங்கி, தலைவியின் காதல் மலர்ந்து களவு ஒழுக்கம் நிகழ்ந்ததற்கான இயல்பான சூழ்நிலைகளாக மூவகைப் புணர்ச்சிகளைக் குறித்துச் சொல்வாள். அவை யாவன:

    1) பூத்தரு புணர்ச்சி : தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

    (2) புனல் தரு புணர்ச்சி : தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

    (3) களிறு தரு புணர்ச்சி : தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்த தலைவனையே தனக்குரியவனாக உள்ளத்தளவில் முடிவு செய்தல்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:55:36(இந்திய நேரம்)