Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் II
5.செவிலி அறத்தொடு நிற்கும் முறையை விவரிக்க.
தலைவியின் வளர்ப்புத் தாயான செவிலி தோழியிடம் சில வினாக்களை எழுப்பி அவற்றின் மூலமாகத் தலைவியின் களவு ஒழுக்கத்தை உணர்ந்து கொள்வாள். அவ்வாறே தலைவியின் தாய் (நற்றாய்) தன் மகளின் வேறுபாடு கண்டு அதற்கான காரணத்தைச் செவிலித் தாயிடம் வினவுவாள். அப்போது களவு வாழ்க்கை பற்றிய உண்மையைச் செவிலித் தாய் புலப்படுத்தி நிற்பாள்.
முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி என அறத்தொடு நிற்கும் முறைகள் இரண்டு. அவற்றுள் ஒன்றான ‘முன்னிலை மொழி’ என்னும் முறையில், செவிலி நேரடியாகவே நற்றாயிடம் உண்மையை உணர்த்தி நிற்பாள்.