Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I2.
உடன்போக்கு எப்போது நிகழும்?
தலைவன் தலைவியின் காதல் மலர்ந்து வளர்ந்த களவு வாழ்க்கை ஊரார்க்குத் தெரியவரும் முன்னரே தோழி அறத்தொடு நிற்பாள். திருமணம் முடிக்க வற்புறுத்துவாள். அதற்கு மாறாக, களவு வெளிப்பட்டுவிடும் சூழலில் பலரும் அறிந்து அலர் பேசும் நிலையில் உடன்போக்கு நிகழும்.