தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • பாடம் - 2

    E

    D02122 வரைவியல் - II
    (நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் வரைவியலின் எஞ்சிய செய்திகளை விளக்குகிறது.

    களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவிகளை எடுத்துரைக்கிறது.

    உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் களவு வெளிப்பாட்டிற்குரிய மூன்று நிலைகளின் வகைகளை விரிவாக விளக்குகிறது.

    ‘வரைதல்’ எனப்படும் திருமணத்தின் வகைகளை எடுத்துரைக்கிறது.

    உடன்போக்கில் ஏற்படும் இடையீடு ஆகிய தடையினைப் பற்றி உணர்த்துகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    வரைவு என்பதற்கு அடிப்படையாய் அமைந்த, களவு வெளிப்படுதலின் மூன்று பிரிவுகளை அறியலாம்.

    உடன்போக்கு, அதனை ஊரார் அறிதல், உறவினர் அறிந்து மீட்டு வருதல் என்னும் மூவகைக் கிளவித் தொகைகளைக் கற்றுணரலாம்.

    உடன்போக்கு எட்டு வகையாகவும், ஒன்பது விரிவுக் கிளவிகளாகவும் உள்ளதை உணரலாம்.

    உடன்போக்கை ஒட்டி நிகழும் ஐந்து வகையான கற்பொடு புணர்ந்த கவ்வைகளை உணரலாம்.

    உடன்போக்காகச் சென்றவர்கள் மீண்டு வருதலாகிய மீட்சியின் வகைகளையும் விரிவுகளையும் அறியலாம்.

    வரைதல் எனப்படும் திருமணம் தன் மனை வரைதல், உடன்போக்கு இடையில் தடுக்கப்பட்டு வரைதல் என இரு வகைப்பட்டு நிற்றலைக் கற்றுணரலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:57:12(இந்திய நேரம்)