Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II1.
பிரிவின் எஞ்சிய வகைகளை எழுதுக.
எஞ்சிய ஐவகைப் பிரிவுகளும் ஒரே வகையான கிளவித் தொகை அமைப்பினை உடையன. அப்பிரிவுகளாவன :
(1)ஓதல் பிரிவு:தலைவன், கல்வி பயிலுதல் காரணமாகப் பிரியும் பிரிவு.(2)
காவல் பிரிவு:தலைவன், நாடு காத்தல் பொருட்டுப் பிரியும் பிரிவு.(3)
தூதிற் பிரிவு:அரசர் இருவர் தமக்குள் மாறுபட்டுப் போர் மேற்கொண்ட போது, அதனைத் தடுத்து இருவர்க்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு.(4)
துணைவயின் பிரிவு:தன் நண்பனாகிய அரசனுக்குப் பகை வேந்தர்களால் இடையூறு நேர்ந்தவழி அதனை நீக்கும் பொருட்டுத் தலைவன் துணையாகச் செல்லுதல்; அதற்காகப் பிரிதல்.(5)
பொருள்வயின் பிரிவு:தலைவன் தனது இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரிதல்.