தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    இறைச்சிப் பொருளை ஒரு சான்றுடன் விவரிக்க.

    அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்
    பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
    தம்இல் தமதுண் டன்ன சினைதொறும்
    தீம்பழம் தூங்கும் பலவின்
    ஓங்குமலை நாடனை வரும்என்றோளே.

    (குறுந்தொகை,83)

    விளக்கம்: இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து:

    இனிமை தரும் களைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது.

    தோழி உணர்த்த விரும்பும் கருத்து:

    உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன் என்பது, தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:00:38(இந்திய நேரம்)