தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-இடைக்காலத்தில் துணைவினைகள்

  • 5.3 இடைக்காலத்தில் துணைவினைகள்

         இடைக்காலத்தில் மாட்டு, ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற புதிய புதிய துணைவினைகள் வழக்கில் வரலாயின. சங்க காலத்தில் வழங்கியனவாகக்     கூறப்பட்ட     துணைவினைகள் பலவும் இடைக்காலத்தில் வழங்கின.     இடைக்காலத்தில்     புதிய துணைவினைகளின் ஆட்சியைக் கீழ்க்கண்ட சான்றுகளால் அறியலாம்.

    சான்று :

    மாட்டு

    நம்மை மறந்தாரை நாமறக்க
    மாட்டேமால்
                 (சிலம்பு, 7:32-3)

    (மறக்க மாட்டேம் = மறக்க மாட்டோம் ;ஆல் = சை)

    ஒழி


    . . . .அவன்முன் அயர்ந்து
    ஒழிவாய் அலை
                 (மணிமேகலை, 21:112)

    (அயர்ந்து - மறந்து ;அயர்ந்து ஒழிவாய் = மறந்து ஒழிவாய்).

    வை


    ஆறைம் பாட்டினுள் அறிய
    வைத்தனன் என்
                 (மணிமேகலை, பதிகம்.95)

    (அறிய வைத்தனன் =
    அறியச் செய்தான்)

    ஆக்கு


    அந்தரந் திரியவும்
    ஆக்குமிவ் வருந்திறன்
                 (மணிமேகலை, 10;80)

    (திரியவும் ஆக்கும்
    =
    திரியச் செய்யும்)

    கூடு

    குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்
                     (சிலம்பு, 10;83)

    (குடங்கையின் = வளைந்த கையால் ; நொண்டு = முகந்து கொள்ளவும் கூடும் = உட்கொள்ளவும் தகும்).

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
      துணைவினை என்றால் என்ன?
    2.
      கூட்டுவினையின் அமைப்பு யாது? ஒரு சான்று தருக.
    3.
      சங்க காலத்தில் வழங்கிய துணைவினைகள் யாவை?
    4.
    சங்க காலத்தில் தொழிற்பெயருடன் சேர்ந்துவந்த
    துணைவினைகள் யாவை?
    5.
    இடைக்காலத்தில் வழங்கிய புதிய துணைவினைகள்
    யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 11:47:46(இந்திய நேரம்)